அம்பானி ஆண்டவன்கிட்ட கண்ணை மூடி கை கட்டி நின்னு கும்பிடுகிற போட்டோதான் இப்ப ஃபேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் வைரலாயிட்டு வருது. அம்பானியோட வேண்டுதல் என்னவா இருக்கும்? ‘என்ன கடவுளே இந்த அதானி இவ்வளவு சீக்கிரம் என்னை முந்தி போயிட்டிருக்கான்’னு வேண்டியிருப்பாரோ?
நீங்க அப்டேட் பாருங்க

சரவணன்
நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை! ~ கோட்டை அழிக்காம பரோட்டோவை எல்லாம் சரியா எண்ணியிருப்பாங்க இல்ல..
balebalu
வன்முறையை தூண்டுவதால் ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக்டாக் போன்ற செயலிகளுக்கு தடை விதிக்க தாலிபான்கள் முடிவு – நேரடி சண்டைகளே இருக்கும்போது டிஜிட்டல் எதுக்கு ன்னு முடிவு பண்ணிட்டாங்க போல

சாணக்கியன்
கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை வைத்தோம்”-எடப்பாடி
என்ன சொல்ல வர்றாரு என்னையும் பன்னீரையும் இணைத்து வையுங்கள்ன்னு சொல்றாரா..?
மயக்குநன்
இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம்!- பிரதமர் மோடி.
ஆமாமா… மீம்ஸ் உற்பத்தி மையமா மாத்திட்டீங்களே..!

amudu
அரசியல்வாதிகளுக்கு தேர்தல் சமயத்தில் மட்டுமே மக்கள் எஜமானர்கள். கார்பரேட் நிறுவனங்கள் தான் அவர்களுக்கு நிரந்தர எஜமானர்கள்.

ஜா.வி
எல்லாம் தெரியும் என்று குழப்பத்துடன் இருப்பதைவிட
எதுவும் தெரியாது என்று தெளிவாய் இருப்பதே மேல்.
-படித்தது

balebalu
ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை நீங்களே மாற்றம் செய்ய முடியும் – செய்தி எப்படி மாத்தினாலும் ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும் இல்லைன்னா பயங்கரமா கருப்பா இருக்கும்

சரவணன். ????
இன்னைக்கு உலக அமைதி தினமாம்.. என்னைக்கு ஆபிஸ்ல மேனேஜரும் வீட்ல மனைவியும் பேசாம இருக்காங்களோ அன்னைக்கு தான் உண்மையான அமைதி தினம்..

கோழியின் கிறுக்கல்!!
Train Ticket book செய்யும் போது நம் Berth preference Upperஆ, Lowerஆ என்பது சொல்லி விடும், நம் வயதை!!
லாக் ஆஃப்