ஏனுங்க அமைச்சரே அன்பில் மகேஷ் அய்யா… எங்க வீட்ல ஒரு பஞ்சாயத்து.
பெரியவன் ஆறாவது படிக்கிறான். சின்னவன் ஒண்ணாவது படிக்கிறான். சின்னவனுக்கு காலாண்டு பரிட்சை முடிஞ்சு பத்து நாள் லீவாம். பெரியவனுக்கு அஞ்சுநாள்தான் லீவாம்.
ஸ்கூல் விட்டு வந்தவுடனே ரெண்டு பேரும் வீட்ல கட்டிப் புரண்டுகிட்டு கெடக்குறானுங்க…
அப்ப ஆறாவது படிக்கிற பெரியவன் என்கிட்ட, ‘அப்பா… ஸ்கூல் மினிஸ்டர் அன்பில் மகேஷ் நம்பரை கூகுள்ல தேடி அவரை வரச் சொல்லுப்பா’ங்குறான்.
முன்னெல்லாம் ஸ்கூல்லதான் அப்பாவை வரசொல்லுனு ஆர்டர் போடுவாங்க. இப்ப என்னடான்னா பையனே, ‘அமைச்சரை வரசொல்லு’னு ஆர்டர் போடுறான். நான் அமைச்சர் நம்பருக்கு ட்ரை பண்றேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சரவணன். 𝓜
“நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்” -பாமக நிறுவனர் ராமதாஸ்.
~ அந்த ஒத்த எம்பி சீட் தானே?
பா.சக்திவேல்
“தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு” – அமைச்சர் நாசர் தகவல்
மதுபானத் துறை அமைச்சர் எத்தனை கோடிக்கு இலக்கு வைக்கப் போறாரோ?
H.Umar Farook
கொரானோ தொற்று முடிவுக்கு வருகிறது !- உலக சுகாதார அமைப்பு
இனி விலைவாசி உயர்வு , ஜிடிபி சரிவு , ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இதுக்கெல்லாம் கொரானாவை காரணமாக சொல்ல முடியாதா ஜி ?!
ச ப் பா ணி
குறிப்பிட்ட வயசுக்கு மேல வாழ்க்கையையே கலர் புல்லா மாத்திடுது.. கலர் கலரான மாத்திரைகள்
சரவணன். 𝓜
பாமக தான் உண்மையான எதிர்க்கட்சி: அன்புமணி ராமதாஸ்.
~ யாருக்கு?
~ பாமகவுக்கு தான்..!
கோழியின் கிறுக்கல்
நேரத்தின் காரணமாக உங்களை ஒதுக்குபவர்களுக்காக,
நீங்கள் ஏன் நேரம் ஒதுக்குகிறீர்கள்!?
Mannar & company
டிவி சத்தத்தை கூட்டினால் நம்ம வீட்டில் சண்டை என அர்த்தம்,
டிவி சத்ததை குறைத்தால் பக்கத்து வீட்டில் சண்டை
என அர்த்தம்!
சரவணன். 𝓜
நிர்மலா சீதாராமன்~ தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனா அது அவருக்கே தெரியாது…
லாக் ஆப்
வேலுமணி வீட்ல கைப்பத்தினது என்ன தெரியுமா? அப்டேட் குமாரு
சங்கரன்கோவில் தீண்டாமை: கட்டுப்பாடுகளுக்கு இதுதான் காரணம்!