பிப்ரவரி தொடங்குனதுல இருந்து சென்னைல ஒரே வெயில்… வெளிய போனாலே உடம்புல வேர்வை எட்டி பாக்குது.
நேத்தும் அப்படி தான் இருந்துச்சி. அதனால நேத்து சாயங்காலம் டீக்கடைக்கு போகும்போது, ’மச்சான் நாளைல இருந்து டீக்கடைக்கு வர வேண்டாம். ஜூஸ் குடிக்க போவோம்’னு நண்பன் சொன்னான்.
ஆனா இன்னைக்கு பாத்தா… காலைல எந்திச்சதுல இருந்து நைட்டு வர மழை பெஞ்சிக்கிட்டே இருக்கு. நானும், நண்பனும் இன்னைக்கும் வழக்கம்போல டீக்கடைக்கு போனோம்.
மழைக்கு இதமா டீ குடிச்சிட்டே அவன் சொல்றான். ’இதே மாறி வாரத்துக்கு ரெண்டு நாள் மழை பெஞ்சா போதும் கோடைல இருந்து தமிழ்நாடு தப்புச்சிடும்’னு…
எனக்கு அப்போ மைன்ட்ல சூரியன், ‘வாய்ப்பில்ல ராஜா’னு சீமான் மாதிரி சொல்லிட்டு சிரிக்குற மாதிரி தோனுது.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…memes trolls update kumaru
ச ப் பா ணி
பங்குச்சந்தைப் போலத்தான் சிலருக்கு சுகரும்..
தினமும் ஏறியிருக்கா
இறங்கியிருக்கா எனப் பார்ப்பதில்

ArulrajArun
மழை டூ we ; சும்மா சும்மா ஏன் மார்ச் ல மழை பெய்றேன்னு
கேட்காதீங்க , பருவமழை மாறி போனதுக்கு காரணம் சொன்னேன் தாங்க மாட்டீங்க …

பரமசிவம் ராமசாமி
விலை உயர்ந்த பொருள்னா என்னன்னு தெரியுமா? !
நம்ம காசு குடுத்து வாங்க முடியலனா
அது விலை உயர்ந்ததுதான்..!!

mohanram.ko
டூ மழை – நீ பெய்ய வேண்டியது ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்ல…. இப்ப இல்ல
சரண்யா
இல்லை என்பதற்கான மாற்று சொல்,
கேட்டு சொல்றேன் என்று சொல்வது…

✒️Writer SJB✒️
கல்யாண வயசு ஆயிடுச்சி மேட்ரிமோனியல்ல பதிவு பண்ணுடின்னு சொன்னா அமேசான் காரன் மேட்ரிமோனியல் ஆரம்பிக்கட்டும் அப்புறம் பதிவு பண்றேன்னு சொல்றியே ஏன்டி?
புரியாம பேசாத, அவன்தான் கொடுத்தது சரி இல்லன்னா ரிட்டர்ன் வாங்கிப்பான்.!!!

Joe…
“உங்க காசை தரமாட்டோம்”னு சொல்ற ஒன்றிய அரசு கண்ணியமானவர் களாம்,
“எங்களுக்கு சேரவேண்டிய காசை கொடுங்கடா”ன்னு கேக்குற நாம நாகரீகமற்றவர்களாம்..
ச ப் பா ணி
காத்து வரும் fan ல் சத்தம் வராது
சத்தம் வரும் fan ல் காத்து வராது

லாக் ஆஃப் memes trolls update kumaru