இன்னைக்கு தமிழ்நாட்டுக்கு வந்த அமித் ஷாவ வரவேற்கறதுக்கு வச்ச போஸ்டர்ல, அவருக்கு பதிலா சந்தான பாரதி போட்டோவ வச்சிட்டாங்க.
இத சோசியல் மீடியால பாத்ததும் டீக்கடைல இருந்த எல்லாருக்கிட்டையும் காமிச்சேன். அவங்களும் கூட சேர்ந்து கொள்ளு’னு சிரிச்சாங்க..
ஆனா ஒருத்தர் மட்டும் சோகமா இருந்தாரு… என்னானு கேட்டதுக்கு…
”எல்லாரும் அமித் ஷாவ பத்தி பேசுறீங்க… ஆனா என் ஆளு… என்னை கழட்டி விட்டுட்டு, இன்னொருத்தன் கூட ஜாலியா கலியாணத்துக்கு ரெடி ஆகி போஸ் கொடுத்துட்டு இருக்கா’னு டீக்கடைக்கு எதுக்க இருந்த கல்யாண பேனர காட்டிட்டு சோகமா போறாரு… பாவம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun memes trolls update kumaru
சட்டத்தில் ஆயிரம் ஓட்டை உள்ளது மாமா
எப்படி மாப்ள கொலை கொள்ளை குற்றவாளி தப்பிக்கிறது சொல்றீங்களா
கொலை கொள்ளையா, dailyம் ஹெல்மெட் லைசென்ஸ் போடாமா
Traffic police கிட்ட இருந்து தப்பிக்கிறத சொல்றேன் மாமா …

நெல்லை அண்ணாச்சி
அமித்ஷாவுக்கு பதில்
சந்தானபாரதி…!!!
-அரசியல் ” ஞானம் “…!!!

Joe…
மராத்தி அனைவருக்கும் கட்டாயம் ~ மஹாராஸ்டிரா
பஞ்சாபி அனைவருக்கும் கட்டாயம் ~ பஞ்சாப்
அடுத்து குஜராத், உ.பி வந்தாலும் ஆச்சரியம் இல்லை.. ஆனா விதை நம்ம தமிழ்நாடு போட்டது.

mohanram.ko
தமிழுக்காக பாஜக உயிரைக்கூட கொடுக்க தயாராக இருக்கிறது” – தமிழிசை
யாரோட உயிரை?

குருநாதா
me to me-
எப்புட்றா ஒரு பிரச்சினை முடிஞ்சதும் கவலைபட்றதுக்குன்னே
இன்னொரு பிரச்சனைய ரெடியா வச்சுருக்க

vijaychakkaravarthy
“பணக்காரனுக்கும் eliteக்கும் என்னண்ணே வித்யாசம்…?”
“அடேய் மட்டன் நல்லி பிரியாணிய 400 ரூபா கொடுத்து வாங்கி சாப்டா அவன் பணக்காரன்….
அதே மட்டன் நல்லி பிரியாணிய வாங்கி spoon and forkல சாப்டா அவன் elite”

ச ப் பா ணி
“நீ செய் டா வெண்ணெய்” என்பதன் மோட்டிவேட்டட் வெர்சன் தான்
“உன்னால் செய்ய முடியும்” என்பது
நெல்லை அண்ணாச்சி
மோடிஜியின் அமெரிக்கா
பயணம்…” வெற்றி “
-இந்தியா மீது வர்த்தகப் போர்…டிரம்ப் அதிரடி

லாக் ஆஃப் memes trolls update kumaru