இன்னைக்கு ஆபிஸ் வர்ற வழியில அதிமுக நண்பர் ஒருத்தர பார்த்தேன்.
“என்ன நண்பா, எப்போதும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, அனைத்து கட்சி கூட்டத்த புறக்கணிப்பீங்க. ஆனா, இந்த முறை அப்படி பண்ணலையேன்னு” கேட்டேன்.
“என்ன பண்றது நண்பா. ஆல்ரெடி பாஜக கூட கள்ளக்கூட்டணி வச்சிருக்கோம்னு சொல்றாங்க. இந்த கூட்டத்தை புறக்கணிச்சா, கன்ஃபார்ம் பண்ணிருவாங்கன்னு” சொன்னாப்ல.
அவரு கொடுத்த பதில்ல, சிரிக்கிறதா இல்ல சீரியஸா ரியாக்ட் பண்றதான்னு தெரியாம ஒரு மிக்ஸ்ட் ரியாக்ஷன் கொடுத்துட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ArulrajArun
“தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்” என நடிகை நயன்தாரா வேண்டுகோள்
இவங்களே லேடி சூப்பர் ஸ்டார் ன்னு சொல்லுவாங்கலாம் அப்புறம் இவங்களே “தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்னு சொல்லுவாங்கலாம்

நெல்லை அண்ணாச்சி
விலங்குகள் மீது கருணை காட்டுங்கள்…. மோடிஜி
-எங்கள் மீது கருணை
காட்டுங்கள்ஜி……மக்கள்..

Sasikumar J
வாழ்க்கை நல்லா இருக்கணுமா…
செய்ற வேலையை லவ் பண்ணு…!
வேலை செய்ற இடத்துல லவ் பண்ணாத…!

amudu
வாக்கிங் செல்லும் இடங்களில்:
பானிபூரி விற்பது ஒரு பாவச்செயல். சில்லிச்சிக்கன் விற்பது குற்றம். நான்கு வகைச் சட்டினிகளுடன் சூடான சுவையான போண்டா, பஜ்ஜி விற்பது மனிதத்தன்மையற்ற செயல்..

ச ப் பா ணி
அறிவுரை தான்.. கொஞ்சம் அதிகமானால் அறுக்கிற உரையாகிடுது
manoharam.ko
இந்திய பொருட்களுக்கு ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஜி- சட்டம் போடுறது நண்பனா இருந்தா, வரி கட்டுறது கூட வெளியே தெரியக்கூடாது

மயக்குநன்
மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய ஜெ.வின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!- அண்ணாமலை.
கண்கெட்ட பின் ‘இலை’ நமஸ்காரம்..?!

ArulrajArun
“மாடு தோல், எலும்புகள் பயன்பாட்டை அதிகரிக்கவும்” – அமித் ஷா
மாட்டை கொல்ல கூடாதுன்னு சொன்னதும் மாடு தோல், எலும்புகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்யனும்னு சொன்னதும் ஒரே ஆளா…

நெல்லை அண்ணாச்சி
எங்களுக்கு ஒரு மொழி தான்..
அதுவும் ” பேச ” மட்டுமே தெரியும்..
-இரு மொழியாவது…. மும்மொழியாவது…!!!

லாக் அஃப்