இன்னைக்கு முஸ்லிம் ஃபிரண்ட் ஒருத்தனுக்கு கால் பண்ணேன். memes trolls update kumaru
“என்னடா மாப்ள… ரம்ஜான் நோன்புலாம் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு” கேட்டேன்.
“டேய் மாப்ள, வீட்ல கறிக்கஞ்சு இருக்கு போய் வாங்கீக்க. ரம்ஜான் அன்னைக்கு பக்கெட் பிரியாணி பார்சல் வந்துரும்னு. நான் கொஞ்சம் வேலையில இருக்கேன் அப்புறம் கால் பண்ணுறேன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்.
அது எப்படின்னு தெரியல, ஒவ்வொரு வருஷமும் ரம்ஜான் மாசம் மட்டும் போன் அடிச்சாலே, நம்ம பிரியாணிக்கு தான் கால் பண்றோம்னு கரெக்டா கண்டுபிடிச்சிரான். நண்பேண்டா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

iQKUBAL
ஆஃபீஸ்ல தலைக்கு மேல புதுசா 360° CCTV கேமரா மாட்டிருக்கானுக..
நானும் எவ்வளோ நேரம் தான் வேலை பாக்குற மாதிரியே நடிக்கிறது..

பரமசிவம் ராமசாமி
அரசியலில் சமீப கால வீரம் என்பது …
பொதுவெளியில் சத்தமாக கெட்டவார்த்தை பேசுவது…
என நினைத்து அரசியல் பண்ணுகிறார்கள்..

ArulrajArun
நம்ம வாழ்க்கைய “Balance” பண்ணி கொண்டு போறதே இந்த “Bank balance” தான்…
ச ப் பா ணி
முதலில் தேவைன்னு தோணும்,
அப்பறம் தேவையான்னு தோணும்,
அதுக்கப்புறம் தேவையில்லைன்னு தோணும்
Credit card தான்

குருநாதா
பணம் வாங்கிக்கொண்டு பாடம் கற்பிப்பதில் முதலிடம் வகிக்கிறது
“கடன்”
ச ப் பா ணி
உள்ளம் ஒரு கோவில் எனில்..
அதில் mind voice தான் பூசாரி

மயக்குநன்
ஜெயலலிதாவுடன் நடிக்கும் திட்டம் இருந்தது!- ரஜினிகாந்த்.
அரசியலுக்கு வர்றதா இருந்த திட்டம் மாதிரி… அதுவும் நிறைவேறாம போயிடுச்சோ தலைவரே..?!
லாக் ஆஃப் memes trolls update kumaru