இது எனக்கு தேவை தான்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு அக்கா பையன் போன் பண்ணி “வர்ற சட்டமன்ற தேர்தல்ல எனக்கு 18 வயசு ஆகிரும். நான் டிவிகே கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்னு” சொன்னான்.

“ஏன்டா டிவிகே கட்சிக்கு ஓட்டு போடுறேன்னு” கேட்டேன்.

“எனக்கு விஜய்ய புடிக்கும் மாமா. அதனான் ஓட்டு போடுறேன்னு” சொன்னான்.

“சரி… டிவிகே-க்கு என்ன அர்த்தம், சொல்லுன்னு” கேட்டேன்.

“திரிஷா, விஜய், கீர்த்தி சுரேஷ் தான மாமான்னு” கேட்டான்.

“ஆமா டா… விஜய்க்கே நீ ஓட்டு போடுன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

memes trolls update kumaru

ச ப் பா ணி

எப்படியோ ஒரு சந்தர்ப்பத்தில் புரிய வைத்துவிடுகின்றர் சம்பாதிக்கவேண்டியதன் அவசியத்தை..
அது பணத்தையோ மனிதர்களையோ..!

குருநாதா

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே……..
அப்ப சந்தோஷமா இருக்கும் போது என்ன பண்ணுவீங்க பாஸ்

நெல்லை அண்ணாச்சி

மத்திய அமைச்சர் பெண்ணிற்கே பாலியல் தொல்லை…
-சாட்டையை ” சுழற்ற ” வேண்டியது தான்….!!!

Sasikumar J

பைக்ல போகும் போது என்ன பெரிய சடன் பிரேக்…!
ஒய்ஃப் சோல்டர் ப்ரெஸ் தெரியுமா…!

mohanram.ko

அதிமுகவில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகிறது!- திண்டுக்கல் சீனிவாசன்.
அப்ப, டிரம்ப் கூட தான் கூட்டணி வைக்கணும்…

குருநாதா

அவளுக்காக எல்லாத்தையும் விட்டுட்டேன்
சிகரெட் தண்ணியா ?
வெட்கம்,மானம்,சூடு,சொரனை.

Writer SJB

Whatsapp நம்பர் கூட கொடுக்காத தோழியை விட

நமக்காக உயிரையே கொடுக்கும் கோழிதான் சிறந்தது..!

ச ப் பா ணி

தடை அதை உடை- expectation
மாற்றுப்பாதையில் செல்கிறேன்- reality

லாக் ஆஃப் memes trolls update kumaru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share