இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.நண்பன், “என்னய்யா… திமுகவுல இத்தனை அணி இருக்குதுன்னு கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது தான் எனக்கே தெரியுது. எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், மேயருன்னு ரெண்டு நாளா இவங்க விளையாடுன கிரிக்கெட் வீடியோ தான்யா சோஷியல் மீடியா முழுக்க டிரெண்டிங்னு” சொன்னேன்.”சரி… நம்ம அதிமுகவுல கிரிக்கெட் வச்சா மொத்தம் எத்தனை அணி மோதுவாங்கன்னு” நண்பன் கேட்டாப்ள…”இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி-ன்னு நாலு அணி இருந்துச்சு… இப்ப புதுசா செங்கோட்டையன் டீம் களமிறங்கியிருக்குன்னு” சொன்னேன்.நண்பன், “இவங்க கிரிக்கெட் விளையாடுனா… ஆடுகளமே ரணகளமாயிருமேன்னு” கமெண்ட் அடிச்சாப்ல
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
வழி தெரியாம போவது கூகுள் மேப் இல்லாத போது..
வேற வழி இல்லாம போவது கூகுள் மேப் உள்ளபோது
mohanram.ko
இந்தி தெரியாவிட்டால் வட இந்தியாவில் கட்டண கழிப்பறைக்கு கூட செல்ல முடியாது
நாங்க ஏன்டா நடுராத்திரியில சுடுகாட்டுக்கு போக போறோம்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இந்தியன் கிரிக்கெட் டீமுக்கு ஆஸி டூர் எப்படியோ, மோதிஜி க்கு அமெரிக்க டூர் பயணம் அப்படி..
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
யாருக்காக அதிகம் இரக்கப்பட்டோமோ அவங்க தான் முதல்ல நமக்கு எதிரியா மாறுவாங்க.!!

மயக்குநன்
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான்!- செங்கோட்டையன்.
அதிமுகன்னு ஒன்று இருந்துச்சானு கேக்குற நிலைக்கு ஆக்கிடுவாங்களோ..?!
ச ப் பா ணி
பொண்ணு பார்த்தா மண்ணை பார்க்கிற பசங்க 90s kids
பொண்ணு பார்த்தா போன் பார்க்கிற பசங்க 2k kids

குருநாதா
எனக்குனு ஒரு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை…
ஆறுதல் சொன்னா அடுத்த நிமிசமே காசுகேப்பியே

லாக் ஆஃப் memes trolls update kumaru