டீக்கடைக்கு போயி உட்காந்ததும் அங்க கிடந்த நியூஸ் பேப்பர்ல ’புல்லட் பைக் ஓட்டிய பட்டியலின மாணவரின் கையை வெட்டிய சாதிவெறியர்கள்’னு போட்டிருந்த செய்திய படிச்சதும் மனசுல ஏதோ பாரம் அதிகமான மாதிரி இருந்துச்சி…
டீ குடிக்காமலே அங்க இருந்து கிளம்பி வரும்போது, தெருவோரமா காய்கறி வித்துட்டு இருந்தவரோட பையன், எதுக்க போன புல்லட்ட பாத்து, “அப்பா நான் பெரியவனானதும் புல்லட் பைக் வாங்கி உன்ன பின்னாடி வச்சி ஓட்டிட்டு போவேன்’னு சொன்னத கேட்டதும்…
’அந்த சின்ன பையன் வளர்றதுக்குள்ள, இந்த சாதி பெருமை பேசுறவங்களும், மத்தவங்கள தனக்கு கீழா நினைக்குற மனுசங்களும் இல்லாம போயிரனும் சாமி’னு மனசு அதுவாவே வேண்டிக்கிச்சு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

memes trolls update kumaru
ArulrajArun
காதலிக்க நேரமில்லை ல ஆரம்பித்து
காதலிக்க யாருமில்லை ல முடியுது
என்ன காதலோ…

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
Follow your heart” ன்னு சொல்றாங்க.
என் heart எப்பவும் சாப்பாட்ட தான் follow பண்ணுது. இதுக்கு எதாவது treatment இருக்கா?

Mannar & company
கவலைப்படாமல் டேட்டாவைப் பயன்படுத்துங்கள்.
கவலைபடாமலா.. அதுக்கு காசு கேட்டு அம்மா அப்பாகிட்ட கெஞ்சி இருக்கியா..?!

ச ப் பா ணி
வாழ்க்கைல பணம், சந்தோசம், நல்ல ப்ரண்ட்ஸ் யாருமே இல்லயே
Stress: நாந்தான் இருக்கேன்ல

mohanram.ko
அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் பிரித்து எடுக்கும் வரை அண்ணாமலை இங்க இருப்பான்”-அண்ணாமலை
சித்தாள், கொத்தனார் வேலைக்கு போக போறாரா..

கோழியின் கிறுக்கல்!!
எனக்கு வரும் பிரச்சனைகளின் போது என் நண்பர்கள் கூடவே இருப்பார்கள்!!
ஆனா என்ன ஒண்ணு அந்த பிரச்சனைக்கு காரணமே அவர்களாகத் தான் இருப்பார்கள்!!
ArulrajArun
90s kids புலம்பல் ;
காதலர் தினத்தன்னைக்கு லீவு போட்டா நம்மளும் காதல் பண்றோம்ன்னு நினைச்சுக்குவாங்க ன்னு லீவு போட்டதுக்கு காதலும் செட் ஆகல கல்யாணமும் செட் ஆகல

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
ஒவ்வொரு முடிவும் இன்னொரு புதிய தொடக்கத்தை கொண்டு வரும்!!…
லாக் ஆஃப்memes trolls update kumaru