இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ரெண்டு இஞ்சி டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பன், “மாப்ள… தமிழ்நாடு பட்ஜெட் இந்த மாசம் தானன்னு” கேட்டான்.
“ஆமாடா… என்ன திடீர்னு கேக்குற”
“இல்ல… மாப்ள நெல்லைக்கு போயிருந்த நம்ம முதல்வர் அல்வா சாப்பிட்ட போட்டோ பார்த்தேன். ஆல்ரெடி சென்ட்ரல் கவர்ன்மென்ட் பட்ஜெட்ல அல்வா கிண்டிட்டாங்க. இவங்களும் அல்வா கிண்டிருவாங்களோன்னு கெதக்னு இருக்குன்னு” சொன்னான்.
“ஒருவாரம் வெயிட் பண்ணு. திருநெல்வேலி அல்வாவா? இல்ல டெல்லி அல்வாவா? எது பெஸ்டுன்னு பார்த்துருவோம்னு” சொன்னேன்.
மாச தொடக்கத்துல எங்க பட்ஜெட்ல பைசா இருந்ததால, டீக்கு பில்ல கொடுத்துட்டு கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க..

amudu
நூடுல்ஸை கண்டுபிடித்தவர்களை பெற்றோரும், இட்லியை கண்டு பிடித்தவர்களை குழந்தைகளும் , திட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
பரமசிவம் ராமசாமி
வீட்டு விசேஷங்களுக்கு கூப்பிடலன்னு கோபித்துக் கொள்பவர்கள் குறைந்து விட்டார்கள்..
நல்ல வேளை கூப்பிடலைனு நினைப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள்..!

Sasikumar J
அரசியல்வாதிகளுக்கு எப்படி தேர்தல் வாக்குறுதியோ அதே மாதிரி தான் ஆபீஸ்ல லாஸ்ட் நாள்ல ஃபேர்வெல் கொடுக்கும் போது பேசுறதும்…!

நெல்லை அண்ணாச்சி
காங்கிரசின் emergency யால்
அரசியல் அமைப்பு முடக்கப்பட்டது….மோடிஜி
“demonetization ” செய்து
மீட்டுனிங்க…அதான…!!

ச ப் பா ணி
அன்பே பிப்ரவரி பதினாலு நீ எனக்கு
நவம்பர் பதினாலு நான் உனக்கு..
உள்ளூராட்டக்காரன்
விஜய் படம் மாதிரி இல்லாம ஒரு எதார்த்தமான கதை சொல்லுங்க மகிழ்
பொண்டாட்டிய காணோம்னு புருசன் பதறி போய் தேடுறான் சார்…

கோழியின் கிறுக்கல்!!
நாம் சோகமா இருந்தா சுற்றி இருப்பவர்கள் சோகமாகி விடுவார்கள் என்பதற்காக விட,
மகிழ்ச்சியாகிடப் போகிறார்கள் என்பதே நாம் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிப்பதற்கு காரணம்!!
லாக் ஆஃப்