‘விடாமுயற்சி’ படம் எப்படி இருக்குன்னு கேட்க, இன்னைக்கு காலையில இருந்து நம்ம தல ரசிகர் நண்பன் ஒருத்தன காலையில இருந்து கான்டேக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
பயபுல்ல போனும் எடுக்க மாட்றான். மெசேஜ் பண்ணாலும் பார்க்க மாட்றான்.
கடைசியா விவேகம் படம் ரிலீஸ் ஆனபோதும் இப்படித்தான் பண்ணான்.
அவன நினைச்சா எனக்கு வடிவேலு டயலாக் தான் நியாபகத்துக்கு வருது… “அடேய் சோனமுத்தா போச்சா… மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன…”
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான்,… ஓட்டு போட்டு நாமே தேர்ந்தெடுப்பது
கோவிந்தராஜ்
இவனுக என்னைக்கு பானிபூரிக்கும் பீடாவுக்கும் வரி போடறானுகளோ அன்னைக்கு தான் இந்த வடக்கன்களுக்கு பட்ஜெட்ன்னா என்னான்னு தெரியும்….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கடையில இருந்து வாங்கிட்டு வந்து வீட்ல கை தவறி கீழே விழுந்து உடைஞ்சுட்டா, நம்ம வருத்தப்படாம சந்தோசப்படற ஒரே பொருள் எது..?
தேங்காய்
-சிரிங்க சிரிங்க சந்தோசமா இருங்க

ச ப் பா ணி
ஏக்கங்கள் இரு வகை
*எனக்குன்னு யார் இருக்கா?
*எனக்குன்னே வருவீங்களா!
ArulrajArun
பிளாஸ்டிக்கை அனுமதிக்கும் பேருந்துகள் பறிமுதல் – செய்தி
-முருகேசா பிளாஸ்டிக் தயாரிக்கிறத நிறுத்த சொல்லு முருகேசா பாதி பிரச்சனை சரியா போயிடும்

நெல்லை அண்ணாச்சி
இந்தியர்களுக்கு ” விலங்கு ” …..அமெரிக்கா
எல்லையில்…. சீனா….
மோடியின் அமைதி….!!! என்னவோ,..போங்க..ஜி…!!!
ச ப் பா ணி
எல்லாத்தையும் ஈசியா, விளையாட்டா எடுத்துக்கனு
சொல்பவர்கள் யாரும் அப்படி எடுத்துக் கொள்ளாதவர்கள்

vijaychakkaravarthy
-VidaaMuyarchi லீவ் பரிதாபங்கள்
“ஊர்ல பாட்டி செத்துட்டாங்க… நாளைக்கு ஊருக்கு போக ஒரு் நாள் லீவ் எடுத்துக்கலாமா சார்…”
~“தாராளமா எடுத்துக்கோ… சுடுகாட்ல வச்சு வீடியோ கால் பண்ணு…”

லாக் ஆஃப்