இன்னைக்கு ஆபிஸ் வர்ற வழியில பாஜக நண்பர் ஒருத்தர பார்த்தேன். memes trolls update kumaru
நண்பர், “மோடி ஜி-யை பார்த்தீங்களா… ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனசாட்சியா இன்னைக்கு திரிவேணி சங்கமத்துல புனித நீராடியிருக்காரு. அவரைப் போல ஒரு பிரதமர் கிடைக்க நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்னு” சொன்னாப்ல.
அதுக்கு நான், “இப்படித்தான் போன நாடாளுமன்ற தேர்தல்ல கன்னியாகுமரிக்கு வந்து டிராமா போட்டாரு. அதே மாதிரி இப்போம் டெல்லி எலெக்ஷனுக்கு டிராமா போட்ருக்காரு. இந்த வருஷம் தேசிய விருதுகள் பட்டியல்ல சிறந்த நடிகருக்கான நாமினேஷன்ல அவரு பேரையும் சேர்த்தா நல்லா இருக்கும்னு” சொன்னேன்.
“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு” சொல்லிட்டு அந்த பாஜக நண்பர் கிளம்பிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் – பிரதமர்
25 கோடி ஏழைகள் ‘பரம ஏழைகள்’ ஆனார்கள்
என்பதைத்தான் அப்படி சொல்லுறாரோ
நெல்லை அண்ணாச்சி
கும்பமேளா…போகலியா..!? நான் daily குளிப்பேன்..!!!

ச ப் பா ணி
நகை எடுக்கணுங்கிற வார்த்தை வழக்கொழிந்து போய்..
நகையை வைக்கனுங்கிற வார்த்தை புழக்கத்திற்கு வந்துவிட்டது.
தர்மஅடி தர்மலிங்கம்
“நமக்கு ஒரு அவசரம்னு வரும் போதுதான் இந்த உலகமே மெதுவா இயங்கும்!”

mohanram.ko
நமக்கு பிடிச்ச கட்சியில சேருவதை விட, நம்மை கூப்பிடும் கட்சியில சேர்ந்தா தான் பதவி கிடைக்கும்
Sasikumar J
~ US ல இருந்து வர வரும்போது ஐபோன் கம்மியா இருந்தா வாங்கிட்டு வாடா…!
~ டேய் நானே விசா இல்லன்னு துரத்தி விடுறாங்கன்னு வந்துட்டு இருக்கேன் என்கிட்ட வந்து இதெல்லாம் கேட்டுட்டு இருக்கே…!

கோழியின் கிறுக்கல்!!
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மூகமூடியை கழற்றி விடுங்கள்!!
முகமூடியை அணிந்தே கொண்டே இருந்தால் உங்கள் முகம் உங்களுக்கு மறந்து போக கூடும்!!

லாக் ஆஃப் memes trolls update kumaru