இன்னைக்கு நண்பன் ஒருத்தன டீக்கடையில பார்த்தேன். பிஸியா மொபைல்ல எதையோ தேடிக்கிட்டு இருந்தான். memes trolls update kumaru
“என்னடா… என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு” கேட்டேன்.
“6-ந்தேதி தேதி தல படம் வருதுல்ல… அதான் டிக்கெட் புக்கிங் ஸ்ட்டார்ட் பண்ணிட்டாங்களான்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.
“டேய்… இப்படி தான் பொங்கலுக்கும் சொன்ன… படம் ரிலீஸ தள்ளிவச்சிட்டாங்க. எனக்கு தெரிஞ்சு விடாமுயற்சின்னு பேரு வச்சதுக்காகவே இன்னொரு தடவை பட ரிலீஸ தள்ளிப்போடுவாங்கன்னு” சொன்னேன்.
“இல்லை மாப்ள… இந்த மாசம் கண்டிப்பா ரிலீஸாகிரும்னு விடாமுயற்சியோட காத்துக்கிட்டு இருக்கேன்னு” சொல்றான்.
பாவம்… யாரு பெத்த புள்ளையோ….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
காய்கறி வாங்கும்போது இலவசமாக தரும்
கொத்துமல்லி கறிவேப்பிலையின் அளவுதான்
அடுத்த முறை அதே கடையில் வாங்குவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கிறது.

ArulrajArun
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ஏழு லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரம்…
ஏழு லட்சம் பேரை சட்ட விரோதமா உள்ள விட்டுட்டு வெளிய வல்லரசு நாடுன்னா சொல்லிட்டு அலையுற ..

நெல்லை அண்ணாச்சி
தேசிய நெடுஞ்சாலைகளில்
ஒரே மாதிரியான சுங்க ” கொள்ளை “… sorry கொள்கை..!!

ச ப் பா ணி
சென்னையில் கடும் பனிமூட்டம்; ரயில், விமான சேவைகள் பாதிப்பு!
ஆயிரம் பனிகள் மறைத்து நின்றாலும் பணிக்கு போவது நிற்காது

மயக்குநன்
பிரதமர் மோடி எப்போதும் தமிழகம் ‘பக்கம்’ இருப்பார்!- அண்ணாமலை.
மணிப்பூரைத்தான் ‘பாக்காம’ இருப்பாரோ..?!

Mannar & company
‘Valentine’s day’ வரும்போது நினைவுகள் எதிர்காலத்தை நோக்கி செல்கின்றன,
‘Wedding day’ வரும்போது நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி சென்று விடுகின்றன!
Sasikumar J
ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் என்றால் நம் நிழலுக்கு கூட அது தெரியக்கூடாது…!

நெல்லை அண்ணாச்சி
பொருளாதார.. “உச்சத்தை” தேடும்,..மோடிஜி
டாலர்..ரூ.87.31 memes trolls update kumaru
