நம்ம ஃபிரண்டு ஒருத்தரு ஃபேஸ்புக்ல ’உங்களுக்கெல்லாம் அலெர்ட் மெசேஜ் வந்ததனால பதறிப்போயிருக்கீங்க. ஆனா, எனக்கு இன்னும் அந்த மெசேஜ் வர்லையேன்னு திக்கு திக்குனு அடிச்சுக்குது’னு ஒரு போஸ்ட் போட்டிருந்தாரு.
இதப் பாத்துட்டு அவர்கிட்ட பேசினேன். ‘என்னய்யா எனக்கெல்லாம் அலர்ட் மெசேஜ் வந்திடுச்சு… உனக்கு வரலையே… ஒரு வேளை நீ ஆன்ட்டி இன்டியனானு கேட்டுட்டேன். ஏன்யா தேசிய பேரிடரைக் கூட்டுறேனு சொல்லிட்டு ஒரு டீ வாங்கிக் கொடுத்தாரு.
நீங்க ரிலாக்ஸா அப்டேட் பாருங்க
தர்மஅடி தர்மலிங்கம்
தேர்தல் பரப்புரையின் போது தோசை சுட்டு வாக்கு சேகரித்த ராகுல் காந்தி; செய்தி!
நல்லவேளை… வடை சுட்டு வாக்கு சேகரிக்காம போனாரே.?!
மயக்குநன்
மக்கள் ஒரு நாள் சீமானைக் கொண்டாடும் காலம் வரும்!- சீமான்.
இப்போதைக்கு மீம்ஸ் கிரியேட்டர்ஸ்தான் அண்ணனைக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க போல..?!
ச ப் பா ணி
பிரிட்டனில் தஞ்சம் அடைந்திருந்த நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்
ஊருக்கு போன wife திரும்ப வந்தது மாதிரி
balebalu
நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த
6 மாத இலக்கு – பிரதமர்
பத்து வருஷமா செயல்படுத்த முடியாததையா ஆறு மாதத்துல செய்து விட போறாங்க
கடைநிலை ஊழியன்
ஆயுத பூஜை னு ஒன்னு மட்டும் வருஷ வருஷம் வரலைனா, நம்ம இடத்த சுத்தம் பண்ண ஒரு மோட்டிவேஷன் ‘னே இல்லாம போயிருக்கும் !!
Kirachand
Teacher :ஒரு வேலையை குப்பன் ஒரு மணி நேரத்தில் முடித்தால்… குப்பனும்,சுப்பனும் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் முடிப்பார்கள்?
Me :ஒரு நாள் ஆனாலும் முடிக்க மாட்டாங்க டீச்சர்…
Teacher : ஏன்?
Me : ரெண்டு பேரும் அரட்டை அடிச்சே பொழுத போக்கிடுவாங்களே…
மயக்குநன்
தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி 25 சதவீதம் உயர்ந்துள்ளது!- மத்திய அமைச்சர் எல்.முருகன்.
இந்த விஷயம் சீமானுக்கு மட்டும் தெரியாம பாத்துக்கோங்க பாஸ்..!
balebalu
புரிஞ்சு போச்சு … கொடி கம்பம் நட போவதால் 100 நாட்களுக்கு பாத யாத்திரை க்கு லீவு வேணும்…அதான
தர்மஅடி தர்மலிங்கம்
“கூட்டணி என்பது துண்டு மாதிரி..“ – செல்லூர் ராஜு!
அதான்… துண்டாயிடுச்சோ..?!
லாக் ஆஃப்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு!
புதுச்சேரி: சந்திரபிரியங்காவை வைத்து பாஜக ஆடும் சதுரங்க வேட்டை!