இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து நாங்க மூணு பேரு டீ குடிக்க போனோம். அப்போ நண்பர் ஒருத்தர், மோடி இந்தியா பேரையே மாத்திட்டாரு… அது உலக நாடுகள் மத்தியிலேயே அறிவிக்கிற மாதிரி ஜி-20 கூட்டத்துல தனக்கு முன்னாடி “பாரத்” னு வைத்திருக்கிறார்னு சொல்ல, இன்னொரு நண்பர் அதெல்லாம் இருக்கட்டும், நம்ம ஆளுநர் ஆசிரியர்கள் காலை பிடித்து தான் படிச்சேன்னு சொல்லி இருக்கிறார் அப்படின்னாரு.
அதுக்கு ஆளுநரா எப்படி ஆனாராம் அப்படின்னு இன்னொரு நண்பர் கேக்குறாரு….
ரெண்டு பேரும் அரசியல் பேசிக்கிட்டு… வர்ற மாதிரி தெரியல நான் டீக்கு காசு கொடுத்துட்டு கெளம்பிட்டேன்
நீங்க அப்டேட்ட பாருங்க….
Kirachand
கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்னு சொல்றாங்க…ஆனா கோபப்பட்டால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்றாங்க…என்னடா உலகம் இது…
சரவணன். ????
கருணாநிதி, ஸ்டாலினைவிட உயர்ந்து நிற்பார் உதயநிதி! – திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்!
அவர் கூடவும் நீங்க இருப்பிங்கன்னு சொல்லுங்க
ℳsd ❝இதயவன்❞
மேற்குவங்க இடைத்தேர்தல் வெற்றி இந்தியா முழுவதும் தொடரும்: மம்தா பானர்ஜி
அதுக்குள்ள பாரத் னு பேரை மாத்திட்டா எங்கிருந்து தொடரும்?!
சரவணன். ????
“பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது” – பிரதமர் மோடி
~ அப்படி என்ன பயன்?
புதுசா டிரஸ் போட்டு போட்டோ எடுத்துக்கிட்டேன்ல்ல
mohanram.ko
ஒரே டிக்கெட்ல 3 படம் பார்ப்பேன் மாமா
வைகுண்ட ஏகாதசியின் போதா, மாப்ள?
அட்லி படம் பார்க்கும்போது, மாமா
லிட்டில் கிருஷ்ணா
Life ல ஒரே ஒரு குறை!
என்னது?
இந்த Life மட்டும் தான்
சரவணன். ????
தடைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்…!
அமலாக்கத்துறை ~ மீண்டும் திமுக அமைச்சர்கள் வீட்லேயே ரெய்டு பண்ணலாமா?
கணவன் ~ இன்னொரு கல்யாணமும் பண்ணலாமா?
அதிமுக ~ மறுபடியும் மாநாட்டில் புளியோதரை போடலாமா?
ஹசாரே ~ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இன்னொரு வாட்டி உண்ணாவிரதம் இருக்கலாமா?
ஆன்டனி வளன்
மங்குனி அமைச்சர் தனது சுகாதாரத்துறை குறித்து ஒரு வாரம் டியூசன் படிப்பது நல்லது.
மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கு அண்ணன் மா சு வந்து இரண்டு ஆண்டுக்கும் மேலாகிறது. ஆனாலும் இப்போது வரை அரசு மருத்துவமனைகளில் உள்ள சாதாரண நடைமுறை கூட அவருக்கு தெரியாமல் இருப்பது பரிதாபத்துக்கு உரியது.
ஆனால் தனக்கு தெரியாத விசயங்களில் கூட அதிரடி நடவடிக்கை உடனே மருத்துவரை டிஸ்மிஸ் செய் செவிலியரை டிஸ்மிஸ் செய் என்று கேமராவும் கையுமா விளம்பர மோகத்தில் வெறி எடுத்து திரிவது அதை விட பயித்தியக்காரத்தனம் மட்டுமல்ல ஓவர் எகத்தாளம்..
சினிமாக்கள் பார்த்து அதுவும் முதல்வன் பட அர்ஜூனின் புகழ் கதாபாத்திரத்திரத்தால் அண்ணன் மா சு ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கார் போல.
எப்போதும் ஒரு கேமராமேன், அரசாணை பிரின்ட் செய்ய மடிக்கணினியோடு ஒரு அரசு அதிகாரின்னு அவர் பிலிம் காட்ட பலிகடாவா சிக்குனது டாக்டர்கள் தானா?
மருத்துவ சுகாதாரத்துறையின் மீதான கோரிக்கைகள் மருத்துவர் செவிலியருக்கான காலி பணியிடங்கள் உட்பட ஏராளமான குறைகள் இருக்க அதை நிவர்த்தி செய்வதை விட்டுட்டு சம்மந்தமே இல்லாமல் டாக்டரை ட்ரான்ஸ்பர் பண்ணு பணி நீக்கம் செய்னு அவர் நடத்தும் லூசுத்தனமான செயல்களை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
அதெப்டி ஆட்டோ கண்ணாடியை மட்டும் திருப்புனா ஆட்டோ ஓடும் ஜீவா?
அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு அட்டை உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன்கள் இலவசமாக எடுக்கப்பட அந்த காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப்படுவது ஒரு மாமாங்க காலமாக இங்கே நடைமுறையில் இருக்கு. இது சாமானிய மக்களுக்கு கடை தெரிஞ்ச விசயம் தான்..
இந்த கட்டணமும் கூட அரசு நிர்ணயித்து அரசின் கஜானாவுக்கே செல்லும் கட்டணம் தான். தனியார் லேப்களில் மருத்துவமனைகளில் இதே ஸ்கேன்களுகான கட்டணங்கள் என்பது பல மடங்கு என்பதும் ஊருக்கே தெரியும்.
இந்த நிலையில் தேனி மருத்துவமனையில் திடீர் விசிட் என்று போய் எப்படி ஸ்கேனுக்கு டாக்டர் காசு வாங்கலாம் இந்த டாக்டரை டிஸ்மிஸ் பண்ணுங்க என்று லூசுத்தனமாக உளறுவதும் மக்களிடம் நீங்க ஒரு புகார் எழுதி கொடுங்க நான் நடவடிக்கை என்று பேசுவதும்
இதை ஊடகங்கள் அமைச்சரின் அதிரடி உரியடின்னு விளம்பர வெறி எடுத்து இது ஏதோ டாக்டர்கள் அடிக்கும் கொள்ளை போல தவறாக சித்தரிப்பதை அதுவும் அந்த துறையின் அமைச்சரே செய்வது மிகவும் கேலிக்கு உரியது.
நியாயமா மருத்துவமனையின் நடைமுறை தெரியாத மங்குனி அமைச்சரே…முதலில் தவறான நடவடிக்கை மற்றும் மிரட்டலுக்காக உம்மை தான் டிஸ்மிஸ் செய்யணும் என்று நாம் தான் பேசணும்..
அந்த பெண் மருத்துவர் பாவம் விளக்கம் சொல்லிட்டு இருக்கார்.
நியாயமா அமைச்சர்.. மருத்துவமனை நடைமுறையை நீ ஒழுங்கா படிச்சிட்டு வானு… அந்தம்மா மனதுக்குள் பேசுன விசயம் நமக்கு மட்டும் தான் தெரியும்.
அமைச்சர் பிலிம் காட்டுற வேலையை விட்டுட்டு விளம்பர மோகத்தில் அதிரடி தடாலடின்னு கோமாளித்தனம் செய்வதை விட்டுட்டு அரசு சுகாதாரத்துறை மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை ஒரு வாரம் உட்கார்ந்து படிச்சி புரிந்து கொள்வது நல்லது.
ஒரு வேளை இதை பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு டியூசன் வேணும்னா சென்னை ஓமாந்தூராரிலேயோ அல்லது சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியரையோ நாம் ஏற்பாடு பண்ணி தர்றோம். தாராளமா டியூசன் படிச்சிட்டு வரட்டும்.
அமைச்சருக்கு சும்மா பொழுது போகலன்னா கேமராவை எடுத்துட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மற்றும் மருத்துவர்களின் தாலியறுக்க வேண்டாம் என்று மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறோம். உங்க விளம்பர போதைக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் ஒன்றும் ஊறுகாய் அல்ல..
லாக் ஆஃப்
டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் : சிவசங்கர்