வேலுமணி வீட்ல போன தடவ ரெய்டு நடந்தப்ப ரெண்டு பிரியாணி பொட்டலமும் ஒரு வாட்டர் பாட்டிலும் கெடைச்சது…. இப்ப மறுபடியும் ரெய்டுக்கு போனப்ப, வாட்டர் பாட்டிலும் விஜிடபிள் பிரியாணியும் கைப்பத்தினேன்…. இதை அதிகாரிங்க யாரும் சொல்லலைங்க… வேலுமணி வீட்டு வாசல்ல இருந்த நம்ம அதிமுக தோஸ்துதான் சொன்னாரு. அவர் கைப்பத்தினத இந்நேரம் சாப்ட்டிருப்பாரு. நீங்க அப்டேட்டை பாருங்க….

சாணக்கியன்
போதைப் பொருட்களை விற்பதே திமுகவினர்தான்! – எடப்பாடி பழனிசாமி! குட்கா பாஸ்கரை வச்சிட்டு இந்த டயலாக்கை எல்லாம் நீங்க பேசலாமா பழனி

கோழியின் கிறுக்கல்
தெரு நாய்கள் அதிகம் இருக்கும் தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடல் எடை விரைவில் குறைய வாய்ப்புள்ளது!!????

Mannar & company
என்னங்க வாக்கிங் போறப்ப கீரை வாங்கிட்டு வந்துடுங்கன்னு மனைவி சொல்றப்பதான் நம்மளை கீரை வாங்க போக சொல்றாங்களா.. இல்ல வாக்கிங் போக சொல்றாங்களாங்கற டவுட்டு வருது.
-வாக்கிங்

ச ப் பா ணி
நீங்க சுங்கச் சாவடியில் எவ்வளவு வேனா கட்டணம் உயர்த்திக்குங்க. நாங்க சுத்திப் போய்க்கிறோம்
-சுங்கம் தவிர்க்கும் சோழர்கள்

ஜெகதீஷ்.கோ
தூரத்துல இருந்தே எப்டிடா ராகுல் டீ-சர்ட் எவ்வளவு விலை-னு கண்டுபிடிச்சீங்க?
என்னங்க இந்த நாட்டயே வித்தவனுக்கு
ஒரு பனியன் விலை தெரியாதா!?

மயக்குநன்
பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை!- நிதிஷ் குமார்.
பிஹார் முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் தூக்கிடுவாரோங்கிற பயம்தானே..?!

சரவணன். ????
ஆரம்பத்தில் வேணும்னா தோல்வி கிடைக்கும்.. ஆனால் இறுதியில் வெற்றி உங்களுக்குத்தான்…!
என்ன ஒன்னு அப்ப நீங்க இருக்க மாட்டிங்க.. அவ்ளோதான்!

சாணக்கியன்
வேலுமணி வீட்டில்…
அண்ணே போன முறை ரெய்டு அன்னைக்கு சிக்கன் பிரியாணி ரோஸ் மில்க் கொடுத்தீங்க, இந்த முறை மட்டன் பிரியாணி லஸ்ஸி கொடுத்தா நல்லாயிருக்கும்..
லாக் ஆப்
பத்து எம்.எல்.ஏ. பேசுறாங்கன்னா 60 எம்.எல்.ஏ. பேசுறதில்லையா?: அப்டேட் குமாரு