என்னப்பா பத்து திமுக எம்.எல்.ஏ. என்னோட பேசிக்கிட்டிருக்காங்கனு எடப்பாடி சொல்லியிருக்காரே பாத்தியானு டீ கடை வாசல்ல நம்ம தம்பி அரசியலைக் கெளப்பினாரு,.
இன்னொரு அண்ணன், ‘அப்படின்னா அதிமுகவுல 60க்கும் மேல இருக்குற எம்.எல்.ஏக்கள் யாரும் எடப்பாடிகிட்ட பேசலையா?’ அப்படினு புது கேள்விய கெளப்பினாரு.
இந்த அப்ரோச் நல்லா இருக்குனு தோணுச்சு. ஆனாலும், டீய குடிச்சுட்டு நான் கெளம்பி வந்துட்டேன்
நீங்க அப்டேட் பாருங்க

சாணக்கியன்
ராகுலுக்கு கருப்புக்கொடி காட்ட சென்றது தவறா?: அர்ஜூன் சம்பத் கைதுக்கு ஹெச்.ராஜா கண்டனம், அப்போ மோடிக்கு கருப்பு கொடி காட்டுனா தப்பா-மக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி
10 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை – எடப்பாடி பழனிச்சாமி
ஏன்… நாசமா போகவா?

balebalu
வெள்ளத்தை’ பற்றி இந்தியாவின் Silicon City கவலை படும்போது
‘கடும் வெய்யிலை ‘பற்றி கவலைப்படுகிறது அமெரிக்காவின் Silicon Valley
இக்கரைக்கு அக்கரை பச்சை

ச ப் பா ணி
நான் பொறுப்பேற்ற நாளிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
-பதவிக்காகவா?மக்களுக்காகவா?

சாணக்கியன்
10 திமுக எம்எல்ஏ.,க்கள் அதிமுக.,வுடன் பேச்சுவார்த்தை: இபிஎஸ்
கட்சியே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு…இதுல ஜோக் வேற அடிக்குறாரு..

கோழியின் கிறுக்கல்!
ஏதாவது சாப்பிட செய்தால் முதலில் போட்டி போட்டு வாங்கி வைத்துக் கொள்வது,அப்பறம் சாப்பிட முடியாமல் திரு திருவென்று விழிப்பது மகளின் வாடிக்கை!!

உள்ளூராட்டக்காரன்
சென்னைல வெள்ளம் வந்தப்ப அவங்க போன் பண்ணி விசாரிச்சாங்களாம். அதனால இப்ப நாம பெங்களூர்வாசிகளை போன் பண்ணி விசாரிக்கணுமாம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச
நேத்து இந்தியா தோத்து போச்சுன்ற சோகம் துளி கூட இல்லாம சினிமா டிரெய்லர் பத்தி சிலாகிச்சுட்டு இருக்கீங்க.. ஹியூமன்ஸாயா நீங்கல்லாம்..?

லாக் ஆப்