இன்னைக்கு விஜய் கட்சிய அறிவிச்ச உடனே டீக்கட பக்கமா வந்த அவரோட பரம விசிறி அழகேஸு… ‘அப்போ 2026ல என்னோட ஓட்டு தளபதிக்கு தா’னு சொல்லிட்டான்.. update kumaru 02-02-24
இத கேட்டு அங்கிருந்த திமுககாரர் ஒருத்தரு ’தம்பி.. உங்க விஜய் சினிமால மடும் தான் தளபதி… ஆனா அரசியல எப்பவும் தளபதி ஸ்டாலின் தா’னு சவுண்ட் விட்டாரு.
இப்படி ஆரமிச்சு கொஞ்ச நேரத்துல ’விஜய் தான் தளபதி… ஸ்டாலின் தான் தளபதி’னு ரெண்டு பேரும் மாறி மாறி விடாம அரமணி நேரமா கத்திக்கிட்டே இருந்தாங்க.
அப்புறம் அமைதியான ரெண்டு பேரையும் ’என்னப்பா தளபதி யாருன்னு முடிவு பண்ணிட்டீங்களா?’னு டீ மாஸ்டர் கேட்க.. “யோவ் தளபதியெல்லாம் இருக்கட்டும் சண்ட போட்டு தலைவலிக்குது. ஒரு டீ போடுயா’ தலைய புடிச்சிட்டு நிக்குறாங்க.
கட்சி பேர அறிவிச்சதுக்கே இந்த அக்கப்போரா… இன்னும் என்னென்ன பாக்க போறோமோ…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
அபிவீரன்
பேருலயே வெற்றினு வெச்சிட்டா தோத்தாலும் வெற்றி கட்சினு ஆயிடும்ல…
#பாக்ஸ்_ஆஃபீஸ் மாதிரி
கடைநிலை ஊழியன்
என்னப்பா விஜய் கட்சி ஆரம்பிக்குறாரு னு ஊரே சந்தோசமா கொண்டாடிட்டு இருக்கு.. நீ யாருப்பா அழுதுகிட்டு இருக்க..
ஆனா, இனி படம் நடிக்க மாட்டேன் னு சொல்லிட்டாரே.. அவரோட தீவிர ரசிகன் சார் நானு.. #TVK
Reason behind the name of #தமிழகவெற்றிகழகம். 😂🕺🔥 pic.twitter.com/mvD5QmYd0S
— M̷ɾ. 𝐃 (@__Dhinu__) February 2, 2024
ச ப் பா ணி
சிந்துபாத் கதைக்கு அப்புறம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தான் அதிக முறை நீட்டித்துக் கொண்டே போகிறது.
Aadhavan Dheetchanya
சினிமாவுல வேணும்னா நீங்க பல நடிகர்களை பீட் பண்ணிருப்பீங்க விஜய். ஆனா இங்கிருக்கிற ஒரேயொரு நடிகரை உங்களால நெருங்கக்கூட முடியாது.
Kirachand
அதிமுக வாக்குகளை யாரும் பறிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பயந்துட்டியா குமாரு?
நெல்லை அண்ணாச்சி
பாமக தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள்ஆகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை- அன்புமணி ராமதாஸ்..
நம்பிக்கைதான் வாழ்க்கை சின்ன அய்யா…!!!
நாகராஜா சோழன் MA MLA
வெந்து தணிந்தது காடு..
தமிழக வெற்றி கழகத்துக்கு வணக்கத்த போடு..
balebalu
கூட்டணி அமைக்க சரத் குமாருக்கு முழு அதிகாரம் – சமக கூட்டத்தில் தீர்மானம்
அதுசரி யார் தீர்மானம் போட்டது அவரே தான்
உள்ளூராட்டக்காரன்
ஆபிஸை சிட்டிக்கு மாத்தலாம்
ராயப்பேட்டை தேனாம்பேட்டைல இருந்தெல்லாம் கூட்டணி பேச பனையூர் ரொம்ப தூரம்
கோழியின் கிறுக்கல்
அங்க என்னடான்னா கட்சி ஆரம்பிக்கிற அறிவிப்பு வந்துடுச்சு,
ஆனா இந்த பக்கம் இன்னும் அடுத்த பட அப்டேட் கூட வரலை!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் சோதனை : என்.ஐ.ஏ.விளக்கம்!
டிக்கெட் இன்றி பயணம்: ஒரே மாதத்தில் ரூ.4.71 லட்சம் வசூல்!
update kumaru 02-02-24