“அதிகாரிகள அமலாக்கத் துறையில சேர சொல்லுங்க” : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஆபீஸ்ல இருந்து நுங்கம்பாக்கத்துல இருக்க ஃப்ரண்ட பாக்க போனேன். அங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே பேக்கரிக்கு போனோம். அப்ப, “ஏம்பா செந்தில் பாலாஜிய பாஜகல சேருங்கனு அமலாக்கத் துறை கேட்டுருக்காம். நீதிமன்றத்துல வாதாடியிருக்கிறாங்கப்பா”னு சொன்னேன்.

அதுக்கு அவரு மொதல்ல அந்த அதிகாரிகள அமலாக்கத் துறையில சேர சொல்லுங்கனு சொல்றாரு…

நல்ல நகைச்சுவைனு சொல்லிட்டு காச கொடுத்துட்டு கிளம்பிட்டேன்..

நீங்க அப்டேட்ட பாருங்க…

ஜோ…
அர்னாப் ~ ஊடகங்களின் கருத்துரிமையை INDIA கூட்டணி நசுக்குகிறது.
ஜோபைடன் ~ டேய், G20 க்கு வந்த என்கிட்ட கேள்வி கேட்க கூட உங்க மோடிஜி, பிரஸ்மீட்க்கு அலோவ் பண்ணலடா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுகவினர் யாரும் 1000 ரூபாவை கை நீட்டி வாங்க மாட்டார்கள் ~ எடப்பாடி ஆவேசம்
ஆமா.. பேங்க் அக்கவுண்ட்ல ஏற்கனவே போட்ட பணத்தை யாராலும் திரும்ப கையால வாங்க முடியாது..


Kirachand

இண்டியா கூட்டணி வென்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்! – முதல்வர் ஸ்டாலின்
இந்தியா கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், காவிரி தண்ணீரை திறந்து தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாத பட்சத்தில் இந்தியாவை எங்க காப்பாற்ற?


நெல்லை அண்ணாச்சி

I.N.D.I.A வின் நோக்கம் ” சனாதனத்தை ” ஒழிப்பதே -மோடிஜி
அப்புறம் என்னப்பா
விஸ்வகுருவே சொல்லிட்டாரு vote for ….our I.N.D.I.A


ℳsd ❝இதயவன்❞
செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்த மாதிரி பொன்முடிக்கும் அடைப்பு எடுக்கணும் – எச்.ராஜா
திரும்ப ரெய்டு வுட்ருவோம் னு மிரட்டுறாராமாம் ?!


படிக்காதவன்™
மணியா.. மத்தியில கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைச்சது
மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு அக்கவுண்ட்ல 1000ரூ போட்டது இதெல்லாம் மக்கள் நலனுக்காகனு நினைச்சியா
எல்லாம் அரசியல் சூழ்ச்சமம்…


balebalu
மூணு லட்சம் வாடகை நண்பர்களை கொடுக்க வைத்து ஓசியில் குடும்பம் நடத்துபவருக்கு
1000 ரூபாய் என்பது சொற்ப தொகையாகத்தான் தெரியும்


கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சனாதனத்தை ஒழிப்பதே INDIA கூட்டணியின் நோக்கம் – பிரதமர் நரேந்திர மோடி
இதையே இப்பதான் கண்டுபுடிக்கிறாப்லயா..?
கோழியின் கிறுக்கல்!!
வெற்றிக்கு சாத்தியம் இல்லா இடத்தில் சரண் அடைவதே ராஜதந்திரம்!!


வில்லாதி வில்லன் 2.0
டிவி ப்ரிட்ஜ் இருக்குறவங்களுக்கு எல்லாம் 1000 ரூபாய் தறீங்க.. அவங்க தான் ஏழைங்களா? – சங்கி
~கார்ப்பரேட்க்கு 10 லட்சம் கோடி தள்ளுபடி பண்ணிங்களே அவங்க என்ன ஏழைங்களா?

Puthiyamaadhavi Sankaran
“என்னைப் பின்பற்றுகிறவர்களும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் ” – அறிஞர் அண்ணா.
உங்களை நாத்திகர் என்கிறார்கள், நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?
“இல்லை”
அறிஞர் அண்ணாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நேர்காணல் மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர் ஏ. எஸ். ராமன் அவர்களுடன், அண்ணாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இந்த நேர்காணல் அண்ணாவின் மறைவுக்குப் பின் 13/04/1969 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியாகிறது. இந்திய தேசத்தின் அறிவுஜீவிகள் வாசித்த, கொண்டாடிய பத்திரிகை இ.வீ.
ஏ. எஸ். ராமனின் இக்கேள்விக்கு அறிஞர் அண்ணாவின் தெளிவான பதில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
“மதத்தைப் பற்றிய கேள்விக்கு வருவோம், உங்களை நாத்திகர் என்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?
“இல்லை. நிறுவனமயமாகும் மதங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மதம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது என்னுடைய முடிவு. நான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவன். விக்கிரகங்களை வழிபடவும் மாட்டேன். விக்கிரகங்களை உடைப்பதை ஆதரிக்கவும் மாட்டேன்.”👌
மும்பையிலிருந்து, அதாவது அன்றைய பம்பாயிலிருந்து வெளிவந்த “சங்கர்ஸ் வீக்லி’ இதழில் இந்த வார ஆளுமை என்ற தலைப்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவின் பேட்டி 5/3/1967 தேசிய இதழில் வெளிவந்திருக்கிறது.
அதிலும் இதே கேள்வி வேறொரு விதமாக.
“உங்களை நாத்திகர் என்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?”
அப்படியில்லை. எனக்கு ‘உண்மையான நம்பிக்கை’ உண்டு. எனது சேவையையும் பணிகளையுமே வழிபாடாகக் கருதுகிறேன். எம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதே எனது நோக்கம். அதே சமயம், அவர்கள் ஆத்திகர்கள் என்ற போர்வையில் போலி வேடதாரிகளாகிவிடக் கூடாது என்ற கவலையும் உண்டு.
அடுத்தக் கேள்வியில் தன் கருத்தை தெளிவாக தன் “சொர்க்கவாசல்’ திரைப்படத்தில் முன்வைத்திருப்பதாக அண்ணா விளக்கம் அளிக்கிறார்.
அறிஞர் அண்ணா தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்களாக இப்பேட்டியில் சொல்வது ,
சாமர்செட் மாம், பெர்னாட்ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ஹெச். சி. வேல்ஸ், ஆல்பிரட் மார்ஷல்.
அண்ணாவின் வேண்டுகோள் இதுதான்.
“என்னைப் பின்பற்றுகிறவர்களும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் ”
அறிஞர் அண்ணாவைப் போற்றுகிறேன்.
ஒரு தலைமுறை அவரைப் பின்பற்றியது.
ஒரு தலைமுறை அவர் பெயரை மட்டும்
பிடித்துக் கொண்டது.
இன்று அவர் சிலையாகவும்
அரசியலில் பெயராகவும் மட்டுமே
இருக்கிறார்.
. ****
எனக்கும் என் அரசியலுக்கும்
என்றும் அவரே என் வழிகாட்டி.
என் ஆசான்.
அதனால்தான்
அண்ணாவைப் போற்றுகிறேன்,
இன்று அண்ணாவின் பிறந்த நாள். 15 செப்.
#புதியமாதவி_20230915

லாக் ஆப்

மார்க் ஆண்டனி படம் எப்படி? – ட்விட்டர் விமர்சனம் இதோ!

மெட்ரோ நிலத்தை காலி செய்ய கலாநிதி வீராசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
3
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *