அதிமுகவோட அப்டேட் குமாருக்கு இந்த அப்டேட் குமாரு பதில்!
அதிமுகவோட அப்டேட் குமாருக்கு இந்த அப்டேட் குமாரு பதில்!* நாட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்கு… இதுல அதிமுக கூட்டணி தான் உங்களுக்கு முக்கிய பிரச்சனையா… குறுவை அழிஞ்சு போச்சு… டெங்கு அதிகரிச்சு போச்சு…
அதெல்லாம் விட்டுட்டு எங்கள மட்டும் பேசிகிட்டு இருக்கீங்களே அப்படின்னு இன்னிக்கி அதிமுகவோட அப்டேட் குமாரு… அதாங்க நம்ம ஜெயக்குமார் அண்ணன் கேட்டிருக்காரு. அதுக்கு இந்த அப்டேட் குமாரு பதில் சொல்லி ஆகணும் இல்ல… என்ன ஜெயக்குமார் அண்ணா…
நாட்டில் எத்தனையோ பிரச்சனை பத்திகிட்டு எரியும் போது அதுல தண்ணீர் ஊத்தாம பன்னீர்செல்வத்தை பற்றி தானே நீங்க பேசிகிட்டு இருந்தீங்க… உங்க அம்மாவை பத்தி அண்ணாவை பத்தி அண்ணாமலை பேசும்போது கூட கொந்தளிக்காம எடப்பாடிய பத்தி பேசும்போதுதான கூட்டணி முறிச்சீங்க… தலைப்பு செய்திய நீங்களே கொடுத்துட்டு போடாதீங்க போடாதீங்கன்னா எப்படிங்க?
ஒத்தைக்கு ரெட்டை இலையை போட்டுட்டு சாப்பாட்டுல கை வைக்காதீங்கனு மீடியாகிட்ட சொல்லலாமா அண்ணே?
நீங்க அப்டேட்ட பாருங்க மக்களே…
தர்மஅடி தர்மலிங்கம்
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே ‘பிரச்னை’ இல்லை – அண்ணாமலை!
‘பிரச்னை’ இல்லைன்னா அப்புறம் ஏன் மாறி மாறி ‘அர்ச்சனை’ பண்ணிக்கிறீங்க.?!
Mannar & company™
மன அழுத்தத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது ஆப்பிள் ஐ-போன்! –செய்தி
மன அழுத்தம் வர்றதே அந்த ஆப்பிள் ஐபோனை வாங்க முடியலையேன்னுதான்டா..!
கடைநிலை ஊழியன்
நிறைய பேரை எதிர்க்க தனி மனிதனாக தயார் – அண்ணாமலை #
எது அதிமுக ‘ல இருக்குற நாலு பேர எதிர்க்குறதா..
சரவணன். ????
நான் புலி; பூனையுடன் சண்டை போட முடியுமா? – சீமான்
~ ஆமா.. புலின்னு யார் சொன்னது?
யாரும் சொல்ல மாட்டாங்க.. நானே சொல்லிக்கிட்டேன்..!
பர்வீன் யூனுஸ்
முதுகில் உணவு பாக்கெட்டுடன் வயிற்றில் பசியையும் சுமந்து வண்டியில் விரைகிறான் ஸ்விக்கி டெலிவரி பாய்.
Kirachand
பாஜகவை தூக்கி சுமப்பதே அதிமுகவின் கடமையாக உள்ளது! – திருமாவளவன்
திமுகவை சுமப்பதில் நீங்க பொறுப்பா இருக்கிற மாதிரித்தானே?
தர்மஅடி தர்மலிங்கம்
பண்டித நேருவின் பேச்சு என்றென்றும் நமக்கு ஊக்கமளிக்கும்! – பிரதமர் மோடி!
பின்ன… எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அசால்ட்டா அவரு மேல பழிய போட்டு எஸ்கேப் ஆகிடுவீங்களே ஜி!
Mannar & company
என்ன.. புரட்டாசி அதுவுமா கறிக்கடைப் பக்கம் போனியாமே?
சும்மாதான் கோழிக்கறி, மட்டன் விலையெல்லாம் குறைஞ்சிருச்சான்னு பார்க்க போனேன்!
-புரட்டாசி
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) September 24, 2023
லிட்டில் கிருஷ்ணா
டேய் தனியா இருக்கிறது ஒரு மாதிரி இருக்காது டா….
வாழ்க்கைய புரிஞ்சிக்கிட்டா தனியா இருக்குறதே Better னு தோனும்..????
#BE_Alone
மயக்குநன்
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் தலைவராக இருக்கிறேன்!- அண்ணாமலை.
அப்ப… ஆயுசுக்கும் நீங்க தலைவராகவே இருக்கலாம் தலைவரே..!
சரவணன். ????
டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்ல கூடாது – பழமொழி
மனைவி கிட்டயும், மேனேஜர் கிட்டயும் வேலை செய்றேன்னு சொல்ல கூடாது – புதுமொழி
~ நான் புலி, பூனையுடன் சண்டை போட முடியுமா..? – சீமான்..! pic.twitter.com/54HPWZKWm6
— பாக்டீரியா (@Bacteria_Offl) September 24, 2023
லிட்டில் கிருஷ்ணா
உன்கிட்ட புடிச்சதே அந்த Attitude தான் டா….
Few months later
இந்த Attitude-ஆல தான் நீ நாசமா போற..
லாக் ஆஃப்
’பாக்சிங்… ஒரே நாளில் சீமான் தோத்துட்டாரு’: வீரலட்சுமி அறிவிப்பு!
டல் சிட்டியாக மாறிய டாலர் சிட்டி: முதல்வர் ஆவேசம்!