அண்ணாமலைக்கு உடம்பு சரி இல்லை அப்படின்னு குளோபல் ஆஸ்பத்திரியில இருந்து அறிக்கை விட்டுருக்காங்க.
அவரு நல்லபடியாக குணமாயிட்டு வந்து மறுபடியும் பல காமெடிகளையும் சர்ச்சைகளையும் கிளப்புறதுக்கு இப்பவே அப்டேட் குமாரோட வாழ்த்துக்கள்.
அது சரி என்ன ஆச்சு திடீர்னு உடம்பு முடியாம போச்சுனு கேக்குறீங்களா?
நானும் கோயமுத்தூர்லருந்து டெல்லி வரைக்கும் விசாரிச்சிட்டேன். அண்ணனுக்கு டெல்லி தண்ணி ஒத்துக்கல அம்புட்டுதான்…
நீங்க அப்டேட் பாருங்க…
Kirachand
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது ‘உறுதியான’ முடிவு – எடப்பாடி பழனிசாமி
‘இறுதியான’ முடிவு இல்லீங்களே?
வசந்த்
என்ன டி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு குழம்பு வாசனையா இருக்கு?
ஓ..அதுவா ரெண்டே ரெண்டு சொட்டு “கம்ஃபோர்ட்” ஊத்தினேன் அதான் வாசனையா இருக்கு.
சரவணன். ????
“ஜோசியர் அங்கிள், என் காதல் நிறைவேறுமா ?”
“கண்டிப்பா நிறைவேறும் ,தம்பி!”
“தேங்ஸ் மாமா!”
Mannar & company
வாட்ஸ்அப்பில் நாம் சோகமாக ஸ்டேட்டஸ் வைப்பதில்தான் சொந்தக்காரர்களின் சந்தோஷம் அடங்கி இருக்கிறது!
நான் பிச்சை எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதீங்க மாமூல் வாங்க வராதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது..? pic.twitter.com/6frMUGW53S
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) October 4, 2023
ℳsd ❝இதயவன்❞
இங்கிருந்து சீமான் போன்றோர் காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று பேசுவது அபத்தமானது ~ மாணிக்கம் தாகூர் காங்கிரஸ்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் போது நீங்க எங்கிருந்து பேசுனீங்க?!
குருநாதா
பரவால்ல டா காந்திஜெயந்திக்கு
டாஸ்மாக் லீவு னால குடிக்காம இருக்க
~குடிச்சிட்டு படுத்துட்டா ப்ளாக்ல சரக்கு ஓட்டமுடியாதுண்ணே..
மித்ரன் ????.????????????.????????????
~ சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு..
5 மாநில தேர்தல் வருதுல அதுக்கு பேட்ச்வொர்க் பன்ன தான் விலைய கொறச்சோம்…
😄 Good editing. pic.twitter.com/WQhg2o19FA
— Mohamed Imranullah S (@imranhindu) October 4, 2023
ஷேக்பரித்
என்ன பாஸ் டெல்லிக்கு கூட்டணிய பிரிக்க போனீங்களே என்னாச்சி.
மொத்தமா பிரிச்சிட்டாங்கே..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…