கடைநிலை ஊழியன்
exam – FDFS படத்துக்கு போகனும் னு அலாரம் வச்சு எழுந்திரிக்குறானே..
என்னைக்காவது நமக்காக இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சு படிச்சுருகானா னு பாரு.. கல்நெஞ்சகாரன்..
Kirachand
ஒரு செயலை முடிக்க புறப்படும் முன் திட்டமிடுபவன் சாதாரண மனிதன்…
‘போய் பார்த்துக்கலாம்’ என்று புறப்படுபவன் இளந்தாரி பய…
ஆண்களுக்கான ஆயுத_பூஜை_சிறப்பு_பதிவு ..!
பொதுநலன்_கருதி_வெளியீடு
1. சீலிங் ஃபேனை துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துணியில் துடைக்கவும். இல்லையென்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்
2. லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம்
3. சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம், கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்.
4. ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண், வாய், தலையில் விழாமல் தடுக்கலாம்.
5. Microfiber துணியில் துடைத்தால் மிகவும் சுத்தமாக இருக்கும்.
6. சோப் ஆயில் அல்லது கார் ஷேம்பு கொண்டு துடைக்க பளிச் என்று பிரகாசிக்கும்.
7. சந்தனம் குங்குமம் எங்கே வைக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்ட பின் செயல்படவும் – தேவையற்ற திட்டை / பேச்சை தவிர்க்க.
8. நோட்டு, புத்தகம், முகம் பார்க்கும் கண்ணாடி, கட்டிங்பிளேயர், ஸ்குருடிரைவர், கத்திரிக்கோல், டெஸ்டர், பென்டிரைவர், பீரோ சாவி, வீட்டு சாவி, கடப்பாரை, மண்வெட்டி, சரஸ்வதி படம் இவற்றை முன்கூட்டியே சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் – கடைசி நேரத்தில் பதட்டத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள் வருஷா வருஷம் ஒவ்வொன்றையும் சொல்லனும் என்ற வார்த்தையை கேட்காமல் இருக்க.
9. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ”என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு” என்று ஒரு அசரீரி கேட்கும்.
அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும். அதனால் மேற்கொண்டு டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.
குறிப்பு : மருந்து, மாத்திரைகளை சாமி கும்பிட வைக்காதீங்க…. எதை எதை வைக்கனுன்னு கூட தெரியாதா???? என்ற கேள்வி வரும் – ஜாக்கிரதை 🤣
-பாதுகாப்புடன் ஆயுத பூஜையை கொண்டாடுவீர்.
இப்படிக்கு
ஆண்கள் பாதுகாப்பு பேரவை..
கடைநிலை ஊழியன்
என்ன மச்சான் சொல்ற.. இன்னும் லியோ பாக்கலயா..
படம் முக்கியம் னு உனக்கு தெரியுது.. படத்த விட வேல தான் முக்கியம் னு இவனுக்கு (mind) தெரியுதே..
ச ப் பா ணி
ஜன்னல் சீட்டும் புளிக்கும் மழைக்காலத்தில்
Kirachand
டூ வீலர்ல/கார்ல போகும்போது நாம் ராங்கா போனாலும், எதிராக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருபவனை ‘எப்படி வர்றான் பாரு’ என்று குற்றம் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறோம்…
Sasikumar J
ஏழைகளுக்கு தொடர் பண்டிகைகளும் அதை தொடர்ந்து வரும் செலவுகளும் இருக்க பேரிடர் காலங்கள் என்று தனியாக ஏதும் இல்லை…!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: அமர் பிரசாத் கைது… அடுத்து என்ன? அண்ணாமலைக்கு ஷாக்!
ODI World Cup 2023: முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
சூப்பர்