தெரிஞ்சே இவ்வளவுன்னா தெரியாம..? அப்டேட் குமாரு!
டீ குடிச்சிட்டு இருக்கும்போது நம்ம தம்பி செல்போன்ல ஒரு பேஸ்புக் ஸ்டேட்டஸ படிச்சு காட்டுனாப்ல.
‘அண்ணே…போன வாரம் கால் டாக்சி டிரைவருக்கு 9ஆயிரம் கோடி அக்கவுன்ட்ல போட்டாங்க…
ரெண்டு நாள் முன்னாடி தஞ்சாவூர்ல ஒருத்தருக்கு 750கோடிய அக்கவுன்ட்ல போட்டானுக…
நேத்தி சென்னையில மெடிக்கல்ல வேலை பாக்குற ஒருத்தருக்கு 755கோடி அக்கவுன்டுல போட்ருக்கானுக…
இவ்வளவு விஞ்ஞான பூர்வ காலத்துலயும் நம்ம கண்ணு முன்னாடியே 10 ஆயிரம் கோடிக்கு மேல கை மாறி இருக்கே… அப்ப தெரியாம எவ்ளோ மாறி இருக்கும்?’ அப்படின்னு படிச்சி காமிச்சி கேட்டாப்ல.
நியாயமான கேள்விதான்… வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் பத்தல போல… அதான் இப்படி மாத்தி மாத்தி விளையாடுறாங்களோ…
நீங்க அப்டேட்ட பாருங்க…
தர்மஅடி தர்மலிங்கம்
கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்”- தெலங்கானாவில் பிரதமர் மோடி!
இதே உங்க கட்டுப்பாட்டில இருந்திருந்தா தனியாருக்கு கொடுத்துட்டு ‘நியாயம்னு’ சொல்லுவீங்க அதான ஜி.?!
கடைநிலை ஊழியன்
லியோ டிரைலர் மாஸ்சா இருக்கு னு சொல்றாங்க.. படம் ஹிட் தான் போலயே..
சொல்லிட்டு போகட்டும்.. விடாமுயற்சி ஷூட்டிங் மட்டும் ஆரம்பிக்கட்டும்.. அப்பறம் பாருங்க சார்..
Kirachand
புரட்டாசி மாச ஞாயிற்றுக்கிழமை மட்டன்,சிக்கன் இல்லாததால்… ஞாயிற்றுக்கிழமை மாதிரி தோன்றுவது இல்லை!
நெல்லை அண்ணாச்சி
இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்…மோடிஜி்
-அண்ணே.. what about our ..” மணிப்பூர்..!
ℳsd ❝இதயவன்❞
புதியதாக குடிக்க வருபவர்களை கணக்கு எடுத்து , அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் ~ அமைச்சர் முத்துசாமி
கவுன்சிலிங் கொடுக்குறதும் 90மி.லி டெட்ரோ பேக்கை ஆய்வில் வைத்து இருப்பதும் ஒரே அமைச்சரா?!
கடைநிலை ஊழியன்
வர வர.. 12 மணி ஆகும் போது, என்ன இப்ப தான் 12 மணி ஆகுதா னு தோணுது..
என்ன வியாதியா இருக்கும்..
balebalu
ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா போர் ன்னு சொல்லி விலைவாசி எல்லாம் ஏறி கிடக்கு
இப்போ அடுத்தது பாலஸ்தீன இஸ்ரேல் போராம்
இன்னும் என்னவெல்லாம் விலை ஏற போகுதோ
ஆரா
நீங்கள் உங்கள் மனைவியுடன் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஒரு அழகான பெண் வரும் போது….,
உங்கள் மனைவி உங்களை பார்த்து,
“ஏங்க அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்ல?” என்று கேட்டால்…
நீங்க”ஆம்” என்று சொல்வதும் தவறு,
“இல்லை” என்று சொல்வதும் தவறு,
“எந்தப் பெண்?” என்று கேட்பதே சிறப்பு.
பழைய இத்து போன டைரிக் குறிப்பிலிருந்து…..
தர்மஅடி தர்மலிங்கம்
நிதியமைச்சராக இருப்பதில் நெருக்கடி ஏதுமில்லை”- நிர்மலா சீதாராமன்!
உங்களுக்கு என்ன மேடம் நெருக்கடி, நெருக்கடியே நிதித்துறைக்கு தான!
நான்
காந்தி அடிகள் மாதிரி இன்னும் பத்து பேர் பிறந்திருந்தா….
~இந்தியா எப்பவோ வல்லரசு நாடா ஆகிருக்கும்…
அதான் இல்ல… நமக்கு extra பத்து நாளு லீவு கிடைச்சிருக்கும்…
உள்ளூராட்டக்காரன்
படிப்பு அறிவியல் ஆராய்ச்சினு உலகம் எங்கயோ போய்க்கிட்டு இருக்கு
படிடா பரமான்னு படிப்புக்கு விளம்பரம் பண்ற நிலைமைல தான் இன்னும் நாம இருக்கோம்.
சரவணன். ????
கேள்வி கேட்கும் முன் பதில் கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு கேட்பது உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் நல்லது
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
WorldCup 2023: அச்சுறுத்திய ஆஸ்திரேலியா… கூல் வெற்றி பெற்ற இந்தியா
விஜய் – லோகேஷ் சண்டை: மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்