இதுக்கு எந்த அம்பயர் தீர்ப்பு சொல்வாரோ?: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இந்தியா ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. டிக்கெட் கிடைக்காத விரக்தியில் ஸ்டேடியத்தையாவது பார்த்துவிட்டு வருவோமே என்று சாயங்காலம் அப்படியே நடந்து போனேன்.

ஸ்டேடியத்தை சுற்றி உள்ள சாலைகளை  பளபளப்பாக்க  பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் உள்ள டாஸ்மாக்கில் இருந்து வெளியே தள்ளாடியபடி சென்ற குடிமகன்…

”இவனுங்க ஏசில உட்கார்ந்து கூலாக மேட்ச் பார்ப்பதற்காக நாளைக்கு நாங்க இங்க வரக்கூடாதாம்? இத கேட்டா நம்மள கேனப்பையன்னு சொல்லுவாங்க… இதுக்கு எந்த அம்பயராவது வந்து தீர்ப்பு சொல்வாரா? ம்ஹ்ம்ம்” என்று கூறியபடியே சென்றார்…

அதானே என்றபடி நானும் ரூம்க்கு வந்துட்டேன்… நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

ஜோ…
ப்ரோ, காமராஜர், சச்சின் மாதிரி இந்த ஜென்ரேஷன்லயும் படிக்காம சாதிச்சிருக்காங்க..
~ யார், யாரு?
அமலா ஷாஜி, TTF வாசன்…

கடைநிலை ஊழியன்
நீ படிச்சு முடிச்சுட்டு என்ன ஆகலாம் னு இருக்க..
அதுவா சார்.. எதுக்கு வேஸ்ட் டா படிச்சுக்கிட்டு.. நா இப்பவே படிப்ப விட்டுட்டு youtuber ஆகலாம் னு இருக்கேன் சார்..
youtube terms and conditions ‘ச புரிஞ்சுக்கவே படிக்கணும் மூதேவி..

Kirachand
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்! -அண்ணாமலை
அண்ணே… போன் வயர் கட்டாகி ரொம்ப நாளாச்சிண்ணே…
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…

ச ப் பா ணி
நாலு நாளுக்கு முன்னாலயே லோன் கட்டுனு மெசேஜ் அனுப்பிட்டு..
கோவிச்சுக்காதீங்கனு கடைசியில் Please ignore if already paid இந்த வார்த்தையை சேர்த்துக்கிறாங்க

Swathika
2 biggest lies:
*பணமிருந்தா நிம்மதி இருக்காது.
*படிச்சவன் யார்கிட்டயாவது கைகட்டி வேலை பார்க்கணும். படிக்காதவன் 1000 பேருக்கு வேலை கொடுப்பான்.

ஜோ…
ஜி ~ கலவரத்தால அப்பாவி மக்கள் பாதிக்கப்படுறத நினைச்சி அதிர்ச்சியா, வருத்தமா இருக்கு.
~ மணிப்பூரா ஜி?
மணிப்பூரா, அது எங்கே இருக்கு?! இஸ்ரேல் மாப்ள.. அதை நினைச்சுதான் பீல் பண்றேன்..

கோழியின் கிறுக்கல்!!
‘நீ என் காலுக்கு கிழே தான்’ என்றவர் முன்பு, காலுக்கு மேல் கால் போட்டு அமர வைப்பது கல்வி மட்டுமே!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

INDvsAUS உலகக்கோப்பை போட்டி… சேப்பாக்கில் போக்குவரத்து மாற்றம்!

விமர்சனம்: ரத்தம்!

 

+1
2
+1
6
+1
0
+1
4
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *