இம்புட்டு பக்குவப்பட்ட பயலா நீயி? : அப்டேட் குமாரு!

டிரெண்டிங்

அண்ணே லியோ ட்ரெய்லர் பாத்திட்டீங்களா… இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு மேல இதுதான் எல்லா இடத்துலயும் கேள்வி. நம்மகிட்ட ஒரு விஜய் ரசிகக் குஞ்சும் இதே கேள்விய கேட்டாப்ல…

‘நானும் பாத்தேன்.. படம் புல்லா ரத்தம் தெறிக்குது. அது சரி… ஒரு இடத்துல அதிபயங்கர கெட்ட வார்த்தையையும் அசால்ட்டா சொல்லிட்டுப் போறாரு விஜய்.

போன மாசம்தான் பள்ளிக் கூட பசங்களுக்கு பரிசு கொடுக்குறதுக்காக ஒரு விழாவை நடத்துனாரு விஜய், அந்த கூட்டத்துல பேசும்போது, ‘எனக்கு பொறுப்பு வந்திருக்கு. பக்குவம் வந்திருக்கு’ அப்படியெல்லாம் வசனம் பேசினாரு.

ஆனா இத்தனை லட்சம் பேர், கோடி பேர் பாக்கற சினிமா ட்ரையிலர்ல அசால்ட்டா அந்த வார்த்தைய பேசியிருக்காரு. ஏம்ப்பா விஜய்… இதானா உனக்கு வந்த பொறுப்புணர்வு? இம்புட்டு பக்குவப்பட்ட பயலா நீயி?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

கடைநிலை ஊழியன்
me – spending all my salary in first week..
my mind ~ டேய் வேலு.. வேண்டாம் டா.. தப்பு பண்ற..
balebalu
எதுக்குடா சிரிக்குற ?
டிரெயிலர் பாக்குற மாதிரி ஓட்டும் விழும்ன்னு நினைக்குறாங்களே அவங்களை நினைச்சேன் சிரிச்சேன்
Kirachand
2024 தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் சவால்! – அண்ணாமலை
நோட்டாவை ஜெயிப்போம்னு சொல்லி இருந்தால் அது உண்மையிலேயே சவாலா இருந்திருக்கும்!
Image
mohanram.ko
தனியா உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்க்க பயமா இருக்கு மாமா
வீட்டிலேயே.. மாப்ள
இல்ல மாமா, நரேந்திர மோடி ஸ்டேடியத்துல…
Image
Parisal Krishna
Leo Trailer Show, Rohini Theatre, Chennai > ICC World Cup, Narendra Modi Stadium, Ahmadabad
Muthukrishnan
ஆள் மாறாட்ட காமெடி படம் எடுத்தால் கமல் / கிரேசி
ஆள் மாறாட்ட Action படம் எடுத்தால் அட்லி/ லோகி
ஆனால் இரண்டும் கலந்து எடுத்த மாஸ்டர்ஸ் கமல்+ சிங்கிதம்
+1
1
+1
9
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *