நேத்து லவ்வர்ஸ் டேக்கு நேக்கா லீவு போட்ட பக்கத்து சீட் பாக்கியம்… இன்னைக்கு வந்து ’மச்சான் இந்த டைட்டானிக் கப்பலும், இந்தியா கூட்டணியும் ஒன்னு தெரியுமானு கேட்டான். ’என்னடா சொல்ல வர்ற?’னு கேட்டா..
அதுக்கு அவன் ’நெசமாவே ஒரு ஒத்தும இருக்கு மச்சான்… டைட்டானிக் கப்பல சின்னதா ஒரு பகுதி பனில மோதி உடையும்… அதுக்கு அப்புறம் மொத்த கப்பலும் மூழ்கிரும்..
அதுமாதிரி மொதல்ல மம்தா தனித்து போட்டினு சொன்னுச்சி… அத பாத்து கெஜ்ரிவால்.. பரூக் அப்துல்லாவும் தனித்து போட்டின்னு சொல்லிட்டாங்க… போதாக்குறைக்கு நிதிஷ் மொத்தமா டாட்டா காட்டிட்டு போய்டாரு…. போற போக்க பாத்தா…’னு இழுத்தான்.
‘எப்பா பாக்கியம் நீ என்ன சொல்ல வர்றனு புரியுது… நேத்து உன் லவ்வரோட ரீரிலிசான டைட்டானிக் படம் பாக்க போனத தெரிஞ்சிகிட்ட அந்த மேனஜர் மேகநாதன் உன் சீட்டுல ஒரு ஓட்டைய போடனும்னு பேசிட்டு இருக்காரு.. அவர் சொல்றபடி பாத்தா இப்போ டைட்டானிக்கும் உன் வேலையும் தான் ஒன்னு’னு சொன்னேன்.. ஆளு கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
Kirachand
கோவை தொகுதியில் நான் போட்டியிடவில்லை! – அண்ணாமலை
நோட்டாவிடம் தோத்துடுவோம்னு பயந்துட்டியா அண்ணாமலை?
நெல்லை அண்ணாச்சி
தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து..
நன்றி….எசமான்…!!!
சரண்யா
Accept பண்ணிட்டாங்க,..
எதே love வா மச்சி,
Love வா ஆபீஸ் ல TA எழுதி கொடுத்து இருந்தேன் அத…
செங்காந்தள்
அரசை கணக்கு கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது” –
உச்ச நீதிமன்றம்
இதனால பிஎம் கேர் நிதிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே?
நெல்லை அண்ணாச்சி
ஹலோ…
நான் வட்ட செயலாளர்
வண்டு முருகன் பேசுறேன்….!!!
” ஆளுநரை ” எதிர்த்து கவர்னர் வெளிநடப்பு….!!!
கடைநிலை ஊழியன்
போ.. போ.. Valentine’s Week எல்லாம் முடிஞ்சு போச்சு..
போ போ.. போயி பொழப்ப பாரு…
balebalu
தேர்தல் வரை விவரங்களை வெளியிட தடை வாங்குவார்கள்
பின்பு ஜெயித்தால் வேறு ஹிந்தி பெயரில் இதே பத்திரம் வெளியே வரும் 😀
ElectoralBonds
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இந்திய எல்லையோரங்களில் உருவாக்கப்பட்ட புதிய கிராமங்களில் சீன அரசு மக்களை குடியேற்றி வருகிறது!
# சீன அதிபர் டு மோதிஜி:
இதுதான் எங்களோட ‘ஒரே நாடு ஒரே எல்லை’ திட்டம்.. புஜுக் புஜுக்..
கோழியின் கிறுக்கல்!!
நீங்க வேணா பாருங்க,
விரைவில் Electoral bonds சம்பந்தமாக ஒரு அவசர சட்டம் வரப் போகிறது!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் ஆதவ் அர்ஜூன்
எலெக்சன் ஃப்ளாஷ்: காங்கிரசுக்கு எதுக்கு 9 சீட்டு? ஸ்டாலின் போடும் கணக்கு!