சண்டிகர் சாம்பிள் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

கடந்த சில மாசாமா இந்தியா கூட்டணிய நெனச்சி குதுகாலமா இருந்த சண்முகம், கடந்த சில நாளா குத்துக்கல்லாட்டாம் இருந்தாரு. என்னனு கேட்டா அதுக்கு மம்தா, நிதிஷ்னு பேர சொன்னாரு.

இன்னைக்கு அவர் வீட்டுல இருந்து சாம்பார் குழம்பு வாசன வந்துச்சி… சரி போய் வாங்கிட்டு வருவோம்னு போனா அவரு அழுதுட்டு இருந்தாரு சின்ன பிள்ளையாட்டம்… என்னனு கேட்டா… ’இன்னைக்கு சண்டிகர் மேயர்  தேர்தல 8 ஓட்டு செல்லாதுனு சொல்லி பாஜக ஜெயிச்சதா அறிவிச்சிட்டாங்க.

இந்த தேர்தல தான் இந்தியா கூட்டணி முதமுறையா பாஜகவ சந்திச்சது. அதுலேயே பாஜக காரன ஒருத்தன அதிகாரியா போட்டு ஏமாத்திட்டாங்க. இப்படி தான் நாடாளுமன்ற தேர்தலயும் பண்ணப்போறாங்க போல’னு வருத்தப்பட்டாரு…

‘சண்டிகர் சாம்பிள்’ சொல்லி சோகமா இருக்கிற அண்ணன்கிட்ட இப்போ என்ன சொல்லி நான் சாம்பார் வாங்குறது…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ℳsd இதயவன்

எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளார் ~ ஓபிஎஸ்

உங்க கனவையும் சேர்த்தா னு அடிச்சு கூட கேட்பாங்க…சொல்லிராதீங்க?!

balebalu

சவாலுக்கே சவால் விடுபவன் நான் – பிரதமர்

கொரோனா நேரத்துல கை தட்டினதும் , விளக்கு ஏற்றினதும் சவால் ல்ல வருமா ஆபீசர்

ச ப் பா ணி
ஆசைப்பட்டதை அடைந்ததை விட, ஆசைப்படாததை அடைந்ததே அதிகம்…

ஆதி யா இருந்துக்க
~கட்சி மட்டும் தொடங்கினா கண்டிப்பா கோவைல ஜெயிச்சிருவாப்ல’

‘யாரு விஜய்தான?’

~ My V3 ads ஓனர் மாமா

மயக்குநன்
ஒவ்வொரு இந்தியரின் இதயம்தான் எனது வீடு!- ராகுல் காந்தி.

சத்தம் போட்டுச் சொல்லாதீங்க ஜீ… புல்டோஸரோடு ஒரு குரூப் சுத்திக்கிட்டு இருக்கு…!

சரவணன். ????

நாட்டை நேசிக்கின்ற எல்லோரும் ’சங்கி’தான் – வானதி சீனிவாசன்!

ஐஸ்வர்யா ~ அப்ப எங்க அப்பா ரஜினிகாந்த் நாட்டை நேசிக்கறவர் இல்லையா?

கோழியின் கிறுக்கல்!!
வண்டி ஓட்டிகிட்டே போன் பேசுறது ‘மல்டி டாஸ்கிங்’ இல்லைப்பா,
‘மரண டாஸ்கிங்’!!

நாகராஜா சோழன் MA MLA
ஏமாளியாக இருக்கும் வரை கூட்டம் இருக்கும்
கொஞ்சம் விழித்து கொண்டால் தனிமை தான் இருக்கும் !

வசந்த்
மனிதனுக்கு “வீடு” வாழ்விடம் என்றால் “வீதி” தான் வாழ்வாதாரம்.

ℳsd இதயவன்
மக்களவை தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடையும் ~ ஓபிஎஸ்

அதிமுகவை மீட்பேன் னு சொல்றதும் அதிமுக அழியனும் னு நினைக்கிறதும் ஒரே ஆளா?!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

9 நாளில் பொதுத்தேர்தல்… இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை : பாகிஸ்தானில் பதற்றம்!

சர்ச்சையான சண்டிகர் மேயர் தேர்தல் : நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel