எல்லா மீம்ஸும் நட்டாவுக்கே: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

என்னடா இது தமிழ் மீம்ஸ் வரலாற்றுலயே புது கேரக்டர் ஒண்ணு வாலண்டியரா வந்து சிக்கியிருக்குங்குற மாதிரி நெட்டிசன்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் நட்டாவை வச்சி செஞ்சிக்கிட்டிருக்காங்க. மதுரைக்கு வந்தமா மல்லிகைப் பூ இட்லிய சாப்பிட்டமானு இல்லாம எய்ம்ஸ் வேலை 95% முடிஞ்சிடுச்சுனு சொல்லிட்டு போயிட்டாரு அந்த மனுசன். எய்ம்ஸ்ல 95% முடிஞ்சுடுச்சோ இல்லையோ ட்விட்டர்ல 95% மீம்ஸ் நட்டாவுக்குதான்ங்குறது கன்ஃபார்ம் ஆயிடுச்சு…
நீங்க அப்டேட் குமாரு பாருங்க

Velmurugan
தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும் @ ஜெ.பி.நட்டா
சும்மா வாய வச்சுக்கிட்டு இருந்திருந்தா ஏதோ ஒரு இடத்துலயாவது மலர்ந்திருக்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமான பணிகள் 95% சதவீதம் முடிந்ததுன்னு வேற சொல்லிட்டீங்களா சுத்தம்யா


சாணக்கியன்
மோடி வடை தான் சுடுவார்.
நம்ம நட்டா ஜிலேபியே சுடுறாரே..

மயக்குநன்
திமுக அத்தியாயம் ஸ்டாலினோடு முடிவடைகிறது!- ஹெச்.ராஜா.
உங்க அத்தியாயம்தான் சாரணர் இயக்கத் தேர்தலோடு முடிஞ்சிடுச்சே..?!


amudu
பாஜகவினரை கைது செய்யும் அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம். -அண்ணாமலை.
ஆனால் கைது செய்ய வந்தால், நீங்க மட்டும் ஆட்டோ ஏறி பறந்து போயிருவீங்க.


ரஹீம் கஸ்ஸாலி
எயிம்ஸில் ஏற்கனவெ இருந்த செங்கலைக்கூட காணாம் – சு.வெங்கடேஷன் எம்.பி.
அதைத்தான் உதயநிதி தூக்கிட்டு வந்துட்டாரே?!

balebalu
நீர் உயர நெல் உயரும்
கேமிரா தரம் உயர முகத்தின் அழகு உயரும்

amudu
கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சித் தலைமையின் அனுமதி தேவையில்லை. -ஜெய்ராம் ரமேஷ்.
போட்டியிட ஆள் கிடைத்தால் போதும்டா சாமின்னு தானே நினைக்கிறீங்க.


𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠
28 வங்கியில் ரூ.22,800 கோடி மோசடி! – குஜராத் கப்பல் கம்பெனி நிறுவனர் கைது பின்னணி
இதுதான் குஜராத் மாடலா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச
எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவு: ஜே.பி நட்டா
இது அந்த எய்ம்ஸ் கட்டுமானம் பண்றவங்களுக்கே தெரியாது பாவம்..மயக்குநன்
உத்தரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது!- யோகி ஆதித்யநாத்.
இப்படி உங்களை நீங்களே கலாய்ச்சுக்கிட்டா நாங்க என்ன பண்ணுறது ஜீ..?சரவணன். 𝓜
நட்டா ~ என்னய்யா இது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றேன்.. கை தட்டாம பூரா பேரும் சைலண்ட்டா இருக்காங்க..!?
~ தலைவரே இது தமிழ்நாடு, நார்த் இன்டியா இல்ல..!

லாக் ஆப்

+1
0
+1
8
+1
1
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.