தீபாவளிக்கு பெட்ரோல் பாமா? அப்டேட் குமாரு

டிரெண்டிங்

டிவியில நியூஸ் பார்த்தாலே பெட்ரோம் பாமு, பெட்ரோல் பாமுனுதான் சொல்லிக்கிட்டே இருக்காங்க. நான் ரொம்ப உன்னிப்பா நியூஸ் பாத்துக்கிட்டிருக்கும்போது பக்கத்து வீட்டு பள்ளிக் கூட பையன்,

‘அங்கிள் இந்த வருச தீபாவளிக்கு பெட்ரோல் பாம்’ வாங்கித் தரச் சொல்லி எங்க அப்பாகிட்ட கேக்கப் போறேன்… அது எப்படி வெடிக்கும்?’னு என்கிட்ட கேக்குறான்….

ஐயா சர்க்கார் சமூகமே பெட்ரோல் பாம்னா என்னனு பள்ளிக் கூடத்துக்கு பையன் வரைக்கும் கேக்குற அளவுக்கு ஆகிப் போச்சு… முழிச்சிக்கிடுங்க…

நீங்க அப்டேட் பாருங்க…

சரவணன். 𝓜
அசைவம் இல்லாத ஞாயிறுகள் மான்கிபாத்தில் பேசாத பிரதமர் போல வெறுமையாக உள்ளது..


கடைநிலை ஊழியன்
காக்கா  டுடே –

எல்லாரு வீட்டுலயும் சாம்பார் சாதத்த மட்டும் தான் வைக்குறானுங்க.. ஒருத்தராவது ரெண்டு வடை ‘ய சேத்து வைக்குறானுங்களா னு பாரு..


தர்மஅடி தர்மலிங்கம்  
மதுரை எய்ம்ஸ் 95 சதவீதம் பணி முடிந்ததாக நான் சொல்லவில்லை; பாஜ தேசிய தலைவர் நட்டா

அப்போ ஒருவேளை… ‘அட்மின்’ சொல்லியிருப்பாரோ.?!


mohanram.ko
கா கா கா கா
தட் காக்கா- கூப்பிட்டே கதறட்டும் சார். மீதி நாள்ல ஒரு வாய் சோறு வைக்க மாட்டாங்க சார்.

தர்மஅடி தர்மலிங்கம்
எங்கள் தைரியத்தை குறைத்துவிடலாம் என்று நினைத்து விட வேண்டாம் – அண்ணாமலை!

ஆமாமா…. ஆட்டோ பிடிச்சு போயாச்சும் தையரித்தை கொடுப்பாரு….

கடைநிலை ஊழியன்
‘மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சீராகவே உள்ளது’ – நிர்மலா சீதாராமன்
சீராக உள்ளதா.. சிரமமாக உள்ளது னு படிச்சிட்டேன் !!


சரவணன். 𝓜
~ எதுக்குண்ணே அவனை அடிக்கறீங்க?
~ அக்டோபர்ல 1 ஆம் தேதி பிரதமர் ஆரம்பிக்க இருக்குற 5 ஜியும் குஜராத் ஆளா ன்னு கேக்கறான்.

கோழியின் கிறுக்கல்!!
டாலராக நீ,
மதிப்பு குறைந்து கொண்டே இருக்கும் ரூபாயாக நான்!!

மயக்குநன்
அமமுக ஆட்சி அமைத்தால்தான் அதிமுகவை மீட்க முடியும்!- டிடிவி தினகரன்.
அதிமுகவை மீட்கிறது நடக்காத காரியம்னு நாசூக்கா சொல்றாரு போல..?!

லாக் ஆஃப்

சிம்புவுக்கு சொகுசு கார் வழங்கி அசத்திய ஐசரி கணேஷ்

எல்லா மீம்ஸும் நட்டாவுக்கே: அப்டேட் குமாரு

+1
0
+1
8
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *