விக்ரம் லேண்டர் பாலிடிக்ஸ்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஒரு வழியா விக்ரம் லேண்டர் நிலாவுல இறங்கிடுச்சு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்ம இந்தியாவே நன்றிக் கடன் பட்டிருக்கு. விஞ்ஞானிகளை விட இந்த ப்ராஜக்ட்டுக்கு அதிகமா பாடுபட்ட மாதிரி கவிஞர்கள் தொல்லை இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும்… அதை கூட சகிச்சுக்கலாம். இந்த நேரத்துல அவங்கவங்க இதை பாலிடிக்ஸுக்கும் பயன்படுத்திட்டிருக்காங்க. மோடியின் உத்தரவு நிலாவில் நிறைவேறியதுனு ஒரு நண்பர் எனக்கு மெசேஜ் பண்ணிருந்தார். தம்பி மோடி இப்ப எங்க லேண்ட் ஆகியிருக்கார்னு பதில் மெசேஜ் அனுப்பிச்சேன். பதில் இல்ல…
நீங்க அப்டேட் பாருங்க

ஜோ…
~ என்னது, 7.50 லட்சம் கோடிங்குறது ஒரு வருஷத்துல பண்ண ஊழலா?
ஏண்டா, இவ்ளோ பெரிய சம்பவம் பண்ணிட்டாடா, ஊர்ல இருக்குறவன் மேல ED ரெய்டு, IT ரெய்டுன்னு விட்டுட்டு இருந்தீங்க??!


பாக்டீரியா
இப்ப நாம எல்லாரும் பேசுவேண்டிய விஷயம் என்ன?
மீடியா ~ நிலாவுல லேண்ட் ஆகப்போற சந்திராயன் 3 பத்தி..
கொய்யால, பிஜேபி பண்ண CAG ஊழல் 7.5 லட்சம் கோடி பத்தி…


amudu
பழனிசாமிக்கு துரோகத் தமிழர் பட்டம் கொடுக்கலாம். -தினகரன்.
அப்போ… உங்களுக்கு டோக்கன் தமிழர் பட்டம் கொடுக்கலாமா.!?


Jaya Kanagaraja
ரயில் விபத்து நடந்தா – ” ரயில்வே மிஸ்டேக்!
மணிப்பூர்ல கலவரம் நடந்தா மாநில அரசு மிஸ்டேக்!
விலைவாசி உயர்வு எல்லாம் நேரு வோட மிஸ்டேக்!!
நிலாவுக்கு செயற்கை கோள் அனுப்புனா மட்டும் ” மோடியோட சாதனை “.


பெரியார்
Meanwhile in கொங்கு பகுதி :
நிலா ல செண்ட் 50 லட்சமாம் , ஆனா உங்களுக்கு 5000 ல முடிச்சு தர பார்ட்டி இருக்கு, கூட்டிட்டு வரவா கவுண்டரே
#Chandrayaan3Landing


சாணக்கியன்♥♥I.N.D.I.A
சந்திரயானைவிட அதிகமாக அதிமுக மாநாடு உலக அளவில் பேசப்படுகிறது! – ஆர்.பி.உதயகுமார்!
அதை விட அதிகமாக நீங்க போட்ட ஊசிப்போன புளியோதரை பேசப்படுகிறது…தெரியுமா..


balebaluமகாராஷ்டிராவில் கொள்ளை அடிக்க ‘நல்ல நேரம்’ குறித்து கொடுத்த ஜோதிடர் கைது – செய்தி
ஜாதக கட்டம் எண்ணியவரை, ஜெயிலுக்கு கட்டம் கட்டிட்டாங்க

மயக்குநன்
ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது!- பிரதமர் மோடி.
ஆமாமா… கூட்டணி வெச்சு ‘துணை முதல்வர்’ பதவி கொடுத்துடணும்..!


ஜோ…
ஜி ~ வந்தே பாரத் ட்ரெயின் விட்டாலும் எனக்குதான் கிரெடிட். . நிலாவுல சந்திராயன் விட்டாலும் எனக்குதான் கிரெடிட்..


Mariyappan
புளியோதரை தமிழரை செய்தி சேனல்களில் இருந்து காப்பாற்றிய சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🫡
– செல்லூர் விஞ்ஞானி

Niranjan kumar
அன்பே இனி பொடி நடையாய்
போய் வர புதிய இடம் கிடைத்துள்ளது
நிலவின் தென் துருவம் போய் இளைப்பாறி வரலாம்
வா!!!

ℳsd இதயவன்
அடுத்து நிலாவுல ப்ளாட் போடுவோம் ல ~ ரியல் எஸ்டேட் ஒனர்ஸ்
-Chandrayaan3Landing

லாக் ஆப்

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்

சந்திரயான் 3: லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது!

+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *