இன்னிக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி நம்ம வடிவேலு அண்ணனோட பொறந்தநாளு… அவரோட பொறந்தநாளை உலக மீம்ஸ் தினமாக அறிவிக்கணும்னு நம்ம அப்டேட் குமாரு சார்பா தீர்மானத்தை முன்மொழிஞ்சி ஐ.நா.வுக்கு அனுப்பி வைப்போம்.
எங்க ஆதரவு கொடுக்குறவங்களாம் வரிசையா வந்து லைக் போட்டுட்டு போங்க… வடிவேலு வாழ்க அவரால மீம்ஸும் வாழ்க…
நீங்க அப்டேட்ட பாருங்க…
சரவணன். 𝓜
தமிழ்நாட்டின் பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவராக தேர்வாகியுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
எச். ராஜா ~ நமக்கு கடைசி வரைக்கும் 40 ஓட்டு தான் போல…
balebalu
நீல சாயம் மட்டுமல்ல
‘நீட் ‘ சாயமும் நாள் ஆக ஆக வெளுத்து கொண்டிருக்கிறது
ரஹீம் கஸ்ஸாலி
இனி ஸ்கூலில் ரெண்டு ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்தால் தேவல. அப்பா ஒன்றிலும், அம்மா இன்னொன்றிலும் கையெழுத்து போட்டுக்கொடுக்கலாம். ஈகோ இல்லாமல் போய்டும்
சரவணன். 𝓜
நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – வானதி சீனிவாசன்.
உங்க கட்சியை எல்லாம் ஆட்சிக்கு வர வச்சதுக்கு கண்டிப்பா கேட்டு தான் ஆகணும்..
Mannar & company™
இப்பல்லாம் நேரில் பேச முடியாததை வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸாக வைத்து மறைமுகமாக பழிதீர்த்து விடுகிறார்கள்!
ச ப் பா ணி
கோபம் வந்தால் நகம் கொரிப்பதைப் போலத்தான்
சந்தோசத்தில் பேசும் போது ஹேட்போன் மெல்லுவதும்
balebalu
வரும் 2028ல் இந்தியாவில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சீனாவை விட 65 % அதிகமாக இருக்கும் – மத்திய நிதி அமைச்சர்
தயிர், அரிசி ன்னு வரியை அதிகரிச்சுட்டே போனா சும்மா இருக்க முடியுமா
வேலை பார்த்துதானே ஆகணும்
ச ப் பா ணி
பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
எப்பிடியும் அஞ்சு நிமிசத்தில முடிஞ்சிடும். அதை எதுக்கு உருட்டிக்கிட்டு
மயக்குநன்
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் பாஜகவுக்கு நல்லது!- அண்ணாமலை.
நீங்க தமிழக பாஜகவுக்கு தலைவரானது மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு நல்லது பாஸ்..!
லாக் ஆப்
ஒரு கேட் பன்னீர்… ஒரு கேர் எடப்பாடி : அப்டேட் குமாரு