ரீ ரிலீஸ் அலப்பறைகள்: அப்டேட் குமாரு
இப்ப எல்லாம் புதுசா ஒரு ட்ரெண்ட் வந்துகிட்டு இருக்கு. ஏற்கனவே ரிலீஸ் ஆன படங்களை பத்து இருபது வருஷம் கழிச்சு மறுபடியும் ரீலீஸ் பண்றாங்களாம். புதுசா வர்ற படங்களை விட இதுக தான் நல்ல போகுதாம்னு நம்ம நண்பர் ஒருத்தர் சொன்னாப்ல.
அதுக்கு பக்கத்துல இருந்த இன்னொரு பக்கி, ‘ஏங்க திருமலை படம் ரிலீஸ் ஆனப்பதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. இப்ப மறுபடியும் திருமலை ரிலீஸ் பண்றாங்க. எனக்கு மறுபடியும் கல்யாணம் ஆகுமா?’ னு கேட்டுச்சு.
அவன் அவனுக்கு அவன் பிரச்சினை அப்படின்னு சொல்லிக்கிட்டே நான் டீ கிளாஸ வச்சிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க..
Kirachand
தமிழ்நாட்டில் திமுக இனி தேடினாலும் கிடைக்காது! – பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் பாஜக இப்பவே அப்படித்தானே இருக்கு ஜி!
balebalu
தமிழர்களுக்கு பாசத்தை பலமடங்காக திருப்பித் தருவேன்: பிரதமர் பேச்சு
பாசம்லாம் இருக்கட்டும்
வெள்ள நிவாரண பணத்தை பல மடங்கா திருப்பி கொடுங்க ஐயா
வசந்த்
நெல்லை மக்கள் அல்வா போல இனிமையானவர்கள்: மோடி
ஆனா பாஜக எங்களுக்கு பஞ்சு மிட்டாய் போல அதான் தடை பண்ணிட்டோம்
திருப்பூர் சாரதி
நம்ம கட்சி VIPங்க அவங்க கட்சியில் சேரப்போறதா பேசிக்கிறாங்க தலைவரே!
லேட்டஸ்ட்டா வந்த அவங்க லிஸ்ட்ல என்னோட பேரே இருக்குதாம், போவியா…
balebalu
தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம், எதிர்காலத்தைப் பற்றி மிகவும்
தெளிவாக இருப்பார்கள் – பிரதமர்
உண்மைதான்
அதனால்தான் எந்த காலத்துக்கும் உதவாத ஹிந்தி வேண்டாம் ன்னு விலகி போறோம்
ச ப் பா ணி
வெளியில் அழைத்துச் செல்வதாய் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியும்,
அரசியல் தலைவரின் வாக்குறுதியும்
விரைவில் நிறைவேறாது.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“என் சொந்த இடத்தில் இருப்பது போல உணர்வு” – பாஜக மேடையில் விஜயதரணியின் முதல் பேச்சு
கவுதமி : எனக்கும் ஆரம்பத்துல அப்படித்தான் இருந்துச்சு.. அப்புறமாதான் பாஜகவும் அதே மாதிரி என் இடத்தை அவங்க சொந்த இடமா நினைச்சுருக்கானுங்கன்னு தெரிய வந்துச்சு…
கோழியின் கிறுக்கல்!!
செல்போன் சார்ஜ் குறையும் பொழுது, தானாக தூக்கம் வந்து விடுகின்றது!!
ச ப் பா ணி
Fan ல இருந்து சத்தம் மட்டும் தான் வருது. காத்து வரமாட்டீங்கிதே
#வெயில்காலம் ஸ்டார்ட்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
10 ஆண்டு காலம்..கட்சி தாவிய எம்.எல்.ஏ-கள்…கவிழ்க்கப்பட்ட மாநில அரசுகள்!
வருடாந்திர ‘ஒப்பந்தத்தில்’ இருந்து… 2 ‘முக்கிய’ வீரர்களை கழட்டி விட்ட பிசிசிஐ