தேர்தல் தேதி அக்கப்போரு: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நாடே எதிர்பார்த்துக்கிட்ருந்த தேர்தல் தேதி அறிவிப்பு இன்னைக்கு வெளியாகியிருக்கு…

இன்னைக்கு மதியம் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிப்புன்னு சொன்னதும், நம்ம ஃபிரெண்டு 2.50 மணிக்கெல்லாம் டிவி முன்னாடி போய் உட்கார்ந்துட்டான்…

சரி…என்ன தான் அனோன்ஸ் பண்றாங்கன்னு நானும் டிவி முன்னாடி உட்கார்ந்தேன்… 3 மணிக்கு தேர்தல் ஆணையர் டிவில வந்தாரு…

மணி 3.15 ஆச்சு…3.30 ஆச்சு… நம்ம தேர்தல் ஆணையர் மட்டும் ஹிந்தில பேசிக்கிட்டு இருந்தாரு, தேர்தல் தேதி அறிவிப்பு மட்டும் வரல…

2.50-க்குலாம் டிவி முன்னாடி உட்கார்ந்த நம்ம பையன்….”இது ஒப்பேறாது மாப்ள… நான் 4 மணி தலைப்பு செய்தில தேர்தல் தேதி என்னைக்குனு பார்த்துக்குறேன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டான்…

அடேய்…இன்னைக்கு தாண்டா தேர்தல் தேதி அறிவிச்சிருக்காங்க…அதுக்குள்ள இந்த அக்கப்போரா…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
பிரதமர் மோடி விஷ்வகுருவா? மவுன குருவா? – முதல்வர் ஸ்டாலின்
மக்களிடம் பேசும்போது வாயால் வடை சுடும் விஷ்வகுரு!
பிரஸ் மீட்டுன்னு வந்துட்டா… வாயைத் திறக்காத மவுன குரு!

balebalu
இந்தியன் பேங்க் , IOB உட்பட மற்ற பேங்க்குகள் நவ் :
நல்ல வேளை நம்ம ‘லன்ச் பிரேக்’ க்கு எந்த பாதிப்பும் இல்ல

Sasikumar J
தேர்தல் வந்தால் ரோடு போடுறது எல்லாம் அந்த காலம்…!
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்பது இந்த காலம்…!!

ரஹீம் கஸ்ஸாலி
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியிலிருந்து இரவோடு இரவாக மன்சூர் அலிகான் நீக்கம்!
அடேய்… அவரு கட்சி நடத்துற விஷயமே முந்தா நாளு தாண்டா உலகத்துக்கே தெரிய வந்துச்சு. அதுக்குள்ள இப்படியா…?!

கடைநிலை ஊழியன்
தினமும் குறைஞ்சது ரெண்டு லைம் ஜூஸ் ‘ஸாவது குடிக்கணும் போலயே டா..
இப்பிடி வெயில் அடிச்சா என்னடா பண்றது…

 

balebalu
தேர்தல் ஆணையர் விஜய்காந்த்தாக மாறி
புள்ளி விவரங்களை அடுக்கும் நாள் 😀
-electiondate

ச ப் பா ணி
ஒரே நாடு, ஏழு கட்டத் தேர்தல்

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩
ஓஹோ தென்மாநிலங்களில் தான் முதலில் தேர்தல் நடக்குதுன்னு தெரிஞ்சிகிட்டு இதுக்கு தான் வாரா வாரம் தமிழ்நாட்டை சுத்தி சுத்தி வர்றியா..

கோழியின் கிறுக்கல்!!
ஒரே நாளில் தேர்தல் நடத்தவே வக்கில்லையாம்,
இதுல ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’!

லிட்டில் கிருஷ்ணா
டேய் உன்னைய பார்த்தா march மாச வெயில் மாதிரியே தெரில da
எதோ may மாச வெயில் மாறு வேசத்துல வந்த மாதிரியே இருக்கு da….

கோழியின் கிறுக்கல்!!
விழாக்களில் போட்டோ எடுக்கும் ஆர்வத்தில்,
அந்த கணத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்காதவர்களே அதிகம்!!

balebalu
பாப்கார்ன் வித்த காசு வெச்சு தியேட்டர்ல வசதி பண்ணி கொடுத்திருந்தா கூட பரவாயில்லை
ஆனா இப்படி கோடி கோடியா Bond க்கு கொடுத்துருக்கீங்களே
உங்களை மன்னிக்கவே முடியாது

PVRCinemas

நெல்லை அண்ணாச்சி
முழு விவரங்களையும்
அளிக்காதது ஏன்..?
SBI க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி…!!
# அதாண்ணே …இது…!!!!

 

black cat
நாளையில் இருந்து 50k, 1 லட்சம் ரூபாய்லாம் கொண்டு போனா புடிச்சிருவாங்கள்ள டா இன்னமும் ஸ்கூட்டி ,பைக்ல கொண்டு போற காசுதான் எலக்சன் செலவுக்குன்னு நினைச்சிட்டு இருக்காங்கடா…

Kirachand
தமிழ் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம்! – அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
கட்சிகள் எதுவும் வரலயோ

கோழியின் கிறுக்கல்!!
‘குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்’ என்பதை முழுமையாக உணரும் தருணங்களில் முக்கியமான ஒன்று,
பந்திக்கு காத்திருக்கும் நேரம்!!

ச ப் பா ணி
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையது
-தேர்தல் சின்னம்

 

ரஹீம் கஸ்ஸாலி
சரத்குமார் தேசிய அரசியலுக்கு தேவைபடுகிறார் _ அண்ணாமலை
மாநில அரசியலில் தனக்கு போட்டியா வந்துடக்கூடாதுன்னு எவ்வளவு நைஸா அந்தப்பக்கம் தள்ளி விடுறார் பாருங்க

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

543க்கு பதில் 544 : தேர்தல் ஆணைய அட்டவணையில் ஒரு தொகுதி கூடியது ஏன்?

இரட்டை இலை சின்னம் வழக்கு முடித்துவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

+1
1
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *