இன்னிக்கு நம்ம ப்ரைம் மினிஸ்டர் மோடி உள்நாட்லயே உற்பத்தி செய்யப்பட்ட தேஜஸ் விமானத்துல பறந்திருக்காரு. ரொம்ப பெருமையான தருணம்.
இதைப் பார்த்துக்கிட்டிருந்தப்ப ஆபீஸ் தோழி கண்ணாடிய கழற்றிட்டு மறுபடியும் போட்டுக்கிட்டு, ‘சார்… மோடிக்கு எப்பவுமே ஆதரவா இருக்குற கலகக் கார தோழி கங்கனா நடிச்ச தேஜஸ் படம் போன மாசம்தான் ரிலீஸ் ஆச்சு. அந்த படத்துல ஹெல்மெட்டை வச்சிக்கிட்டு இடுப்புல கைய வச்சிக்கிட்டு கங்கனா கொடுக்குற போஸ் போலத்தான், இப்ப தேஜஸ் முன்னாடி மோடி சார் கொடுக்குற போஸும் இருக்கு. இதை போன மாசம் பண்ணியிருந்தா தேஜஸ் படத்துக்கு ப்ரமோஷனா இருந்திருக்குமே…’ அப்படினு வருத்தப்பட்டாங்க.
தேஜஸ் பின்னாடி இப்படி ஒரு கவர் ஸ்டோரி இருக்கா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Writer SJB
மனைவியும் திருக்குறளும் ஒன்னு.. என்னற்ற அதிகாரங்களை வைத்துக் கொண்டு எதையும் இரண்டே அடியில் புரிய வைத்து விடுவதால்.
Panauti Ji today 🫡 pic.twitter.com/5r80elvyxU
— James Stanly (@JamesStanly) November 25, 2023
Dr.Crow
சுரங்கத்துல மாட்டுனவங்க கூட ஜி போய் ஏன் இன்னும் போட்டோஷூட் நடத்தாம இருக்காரு?? சுரங்கத்துல வேலை பாக்குறவங்க யூனிபார்ம் மாடல் ஏதும் கிடைக்கலயா?
Kirachand
நிறையா மீதம் இருக்கு மாமா…
பழைய சோறா மாப்ள?
தேதி கிழிக்காத பழைய காலண்டர் மாமா…
டீ
இந்த பருத்திவீரன் பிரச்சனையால வாடிவாசல் அமீர் கேரக்டருக்கு ஏதும் பாதிப்பு இல்லையே….
கோழியின் கிறுக்கல்!!
நீங்கள் செய்தது பெரிய தவறா, சிறிய தவறா என்பது மனைவியின் கோபத்தை பொருத்தே அமைகின்றது!!
Dr.Aravind Raja
ஏய் அங்க பாருடி.. ஜீ சீனா பார்டர் கிளம்பிட்டாரு.
அக்ஷனா
ஆவின் பாலோ அமுல் பாலோ.. தமிழ் நாட்டுல விக்கணும்னா நீங்க காவி பால் கலக்காமல் வாங்கோ ….
இப்படிக்கு தமிழகம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆப்
உங்கள் தொகுதி கோயிலுக்குச் சென்று… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திடீர் உத்தரவு!