நல்ல வேள அத குடிக்கல… அப்டேட் குமாரு

Published On:

| By Minnambalam Desk

காய்ச்சல் அடிக்குற மாதிரி உடம்பு சுட்டுட்டு இருக்குனு ரெண்டு நாளைக்கு முன்னாடி டீக்கடைல நண்பன் கிட்ட பேசிட்டு இருந்தேன்.

அத கேட்டுட்டு இருந்த சொந்தக்காரர் ஒருத்தரு, ‘மாப்ள என் வீட்டுக்கு வாங்க.. கொஞ்சம் கோமியம் புடிச்சி தாரேன், குடிங்க எல்லாம் சரியாயிடும்’னு சொல்லிட்டு போனாரு. ஆனாலும் அத போய் எப்படி குடிக்கனு அவர் வீட்டு பக்கமே போகல.

இன்னைக்கு டீக்கடைக்கு சோகமா வந்தவருகிட்ட என்னாச்சினு கேட்டேன். ‘ஆசயா வளத்த மாடு, நோய் கண்டு செத்து போயிடுச்சினு சொன்னாரு…

ஒரு நிமிஷம் ஷாக் ஆகி, அந்த நோய் கண்ட மாட்டு கோமியத்த தான் எனக்கு தர பாத்தியாக்கும்’னு கேட்டுட்டு அங்க இருந்து கெளம்பிட்டேன்.

ச ப் பா ணி
ஒவ்வொரு Fresh juice க்கு பின்னாலும் பல
Old Fruits கள் மறைந்துள்ளது.

நெல்லை அண்ணாச்சி
5 மாடு வாங்கணும்,.,.மாமா
பால் வியாபாரமா..மாப்ளே… ” அமிர்த நீர் “…மாமா…!!!

செங்காந்தள்
சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிரோடு இருக்கும் போது நாட்டுடமையாக இருந்தார்கள்,
இறந்த பின் சாதியுடைமையாளர்களாக ஆக்கப்பட்டார்கள்…!!!

balebalu
மத்தவங்க குடிக்கிறது இருக்கட்டும்
இப்போதுள்ள நிலையில்
சென்னையில் மாடுகள் திங்கும் கழிவுகளை பார்த்தால்
IIT டைரக்டரே முதலில் கோமியத்தை குடிப்பாரா என்பது சந்தேகமே

Mannar & company
என்ன டாக்டர் தலைவலி, காய்ச்சல்னு எல்லா பிரச்சனைகளுக்கும் மாட்டு கோமியத்தை கொடுத்து குடிக்க சொல்றீங்க!?
இது “கோமியோ”பதி மருத்துவம்யா குடிங்க!

ச ப் பா ணி
காரணம் கேட்கும்வரை ‘உம்மென்றும்’
காரணம் கேட்டபின் ‘உர்ரென்றும்’ வருவார்கள் பெண்கள்

mohanram.ko
ஏன் நீங்களே கோமியம் விற்க, ஆவின் மாதிரி கோவின் னு ஒரு நிறுவனத்தை உருவாக்க கூடாது?

மயக்குநன்
பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் மூன்றாவது இடத்தில் இந்தியா!- பிரதமர் மோடி பெருமிதம்.
டோல்கேட் வசூல்ல நாமதான் முதலிடம்..!

mohanram.ko
மாட்டுக்கு தீனி வச்சா தான் நல்லா கறக்கும் மாமா…
பால் தானே மாப்ள..
பாலா? சிறுநீர் மாமா…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share