ஏர்டெல் சோதனைகள்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலையில இருந்து ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பர்ல “உங்கள் ரீச்சார்ஜ் இன்றுடன் நிறைவடைகிறதுன்னு” நாலஞ்சு தடைவை கால் வந்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா, நான் எடுக்கவே இல்லை.

திடீர்னு ஒரு புது நம்பர்ல இருந்து கால் வந்துச்சு… யாருன்னு கேட்டா, “சார்… உங்க நம்பர் ரீச்சார்ஜ் இன்னையோட முடியுது. அதனால ரீச்சார்ஜ் பண்ணுங்கன்னு” ஒரு லேடி சொன்னாங்க.

“சரிங்க மேடம்… இப்போதைக்கு என்கிட்ட பணம் இல்லை. நீங்க ரீச்சார்ஜ் பண்ணி விடுங்க. நான் நாளைக்கு பணம் அனுப்புறேன். இந்த மாதிரி சேவைகள் ஏர்டெல்ல இருக்கான்னு” கேட்டேன்.

“ஏர்டெல்லை அழைத்தமைக்கு நன்றின்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டாங்க…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu memes trending tweets update kumaru

‘அட்சய திரிதியை ‘ யின் வாழ்வு தனை
‘வசந்த பஞ்சமி’ கவ்வி கொண்டது

ச ப் பா ணி

திங்கட்கிழமை காலை sick leave சொன்னால்..உண்மையாகவே இருந்தாலும் உலகம் நம்பாது.

Sasikumar J

புது அரசியல்வாதி புதுசா பதவி கிடைச்சதும் அவங்களுக்கு புல்டோசர்ல மலர் தூவுறது என்னமோ மண்ணு அள்ளி கொட்டுற மாதிரியே இருக்கு…!

நெல்லை அண்ணாச்சி

தமிழ்நாடு புறக்கணிப்பு ..பட்ஜெட்
வேடிக்கை பார்க்கும் ” செங்கோல் “

Writer SJB

யாரோ ஒருவராக இருந்து பின் முக்கியமானவராக மாறி கடைசியில் யாரோ ஒருவராக மறைந்து போவது தான் இணைய வாழ்க்கை..

ச ப் பா ணி memes trending tweets update kumaru

இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு எது பப்ளிக் எக்ஸாமுக்கா?
இல்ல பிப்ரவரி 14 க்கு

மயக்குநன்

மோடியின் நவீன பதிப்பு அர்விந்த் கேஜ்ரிவால்!- ராகுல்.
அப்ப… இண்டியா கூட்டணியில் ஜீயும் இருக்கார்னு சொல்லுங்க..!

கோழியின் கிறுக்கல்!!

காலம் கணக்கு வாத்தியார் போலவே,
நாம் கவனிக்காதப் பொழுது முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்து விடுகிறது!!

எப்படியோ ஒரு வழியா வருமான வரி விலக்கு வாங்கியாச்சு..

இனி வருஷம் பனிரெண்டு லட்சம் சம்பாதிக்க வழி பார்க்கனும்.

லாக் ஆஃப் memes trending tweets update kumaru

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share