இன்னைக்கு டீக்கடைல போனப்ப, என் பிரெண்ட் ஒருத்தரு ‘அந்த’ கட்சில சேர போறேன்… நீயும் வர்றியானு கேட்டாரு.
ஒரு நிமிஷம் அவர உத்து பாத்துட்டு, ‘கோமியத்த குடிக்கலாம்னு அந்த ஐஐடி டைரக்டர் சொன்னதும் தமிழ்நாட்டுல இருக்குற அம்புட்டு கட்சிக்காரங்களும் அத தப்புனு சொன்னாங்க. ஆனா அந்த ஒரு கட்சி காரங்க மட்டும் தான் ஆதரவு கொடுத்தாங்க..
எனக்கு என்னமோ, அந்த கட்சில சேரவங்களுக்கு டீக்கு பதிலா கோமியம் தான் தருவாங்கனு நெனக்குறேன். இப்போ நீ என்ன நெனைக்குற?’னு கேட்டேன்.
அவர் கைல வச்சிருந்த டீய உத்து பாத்துட்டு, அந்த கட்சி பக்கமே போகலனு சொல்லிட்டு கெளம்பிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

சரண்யா
ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கை விடவும் மாட்டான்,..
நல்லவங்களுக்கு கொடுக்கவும் மாட்டான், கண்டுக்கவும் மாட்டான்…

ச ப் பா ணி
நல்ல பழக்கத்தை ஆரம்பிக்கிறது கஷ்டம்
கெட்ட பழக்கத்தை நிறுத்துவது அதைவிடக் கஷ்டம்

mohanram.ko
டிமானிடைசேஷன் மூலமா ஜீ கருப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் எல்லாத்தையும் ஒழிச்சிட்டாரு….
அப்ப, அந்த கருப்பு பணம் எங்கே
அதான் சொன்னேனே… ஒழிச்சிட்டாருன்னு

ச ப் பா ணி
கவிதை எழுதுவோரை விட,
கவிதை மாதிரி எழுதுவோர் அதிகரித்துவிட்டனர்.
Writer SJB
வருஷத்துக்கு 300 படம் ரிலீஸ் ஆகுது 30 படம் கூட ஜெயிக்கிறதில்லனு ஒப்பாரி வைக்கிறாங்க
படத்தை எடுத்து உடனே ரிலீஸ் பண்ணாம 12 வருஷம் கழிச்சு ரிலீஸ் பண்ணா படம் ஹிட் ஆயிடும்
ஐடியா இல்லாத பசங்க..!

Abaswaram Ramji
நான் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தில் என்னுடன் ராஜன் என்பவர் பணியாற்றினார். முதலாளியோட செல்லப் பிள்ளை .
Boss கொஞ்சம் லேட்டா வந்தா – அவருடைய ரூம்ல பிளாஸ்க்ல சூடான காப்பியுடன் நிற்பார் ராஜன் முதலாளி மனைவிக்கு லேசா தலைவலின்னு தெரிஞ்சா – இவரு வீட்லேருந்து சாப்பாடு எடுத்திட்டுப் போயிடுவார் .
இப்படி அசத்தி அசத்தி ரெண்டு ப்ரோமோஷன் வாங்கிட்டாரு .எங்களுக்கு எல்லாம் அவரு பேருல செம காண்டு.
ஒரு நாள் காலை முதலாளியோட வயதான அம்மா காலமாயிட்டாங்க . நாங்க எல்லாம் கவலையா மூஞ்சிய வச்சுக்கிட்டு அவர் வீட்டுக்குப் போனோம். என்ன ஆச்சர்யம் ? அங்கே ராஜனைக் காணோம் . உள்ளுக்குள்ள எல்லாருக்கும் ஒரு சிறு சந்தோஷம்.
ஊர்வலத்துல கலந்துகிட்டு நாங்க மயானத்துக்குப் போனோம்.அன்னிக்கின்னு பாத்து அங்கே நெறைய உடல்கள் வரிசை கட்டி நின்றன . முதலாளியின் அம்மாவுக்கு waiting லிஸ்ட் நம் 7. எப்படியும் நாலு மணி நேரம் காத்திருக்கணும்
திடீர்ன்னு ரெண்டாவது Dead Body எழுந்து உக்காந்திருச்சு .பாத்தா நம்ம ராஜன்.
“முதலாளி உங்கள காக்க வைக்கக் கூடாதுன்னு தான் நான் 2வது இடத்தை பிடிச்சு படுத்து கிட்டேன். நீங்க அம்மாவை தகனம் பண்ணிட்டு சீக்கிரமா போங்க . அம்மாவை இழந்த துக்கத்துல நீங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க” ன்னு போட்டானே ஒரு போடு .
இப்போ ராஜன் சார் தான் எங்க GM.

BINDU
எல்லாம் புரிந்தவர்கள் தான் குழம்பித் தவிக்கிறார்கள்.
ஒன்றுமே புரியாமல் வாழ்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்…!

லாக் ஆஃப்