இன்னிக்கு காலைல இருந்து செய்திலாம் தாறுமாறா போய்க்கிட்டு இருந்தது.
ஸ்கூல் புள்ளைங்களுக்கு வழங்குற இலவச காலை உணவு பத்தி அந்த பத்திரிக்கை அப்படி அசிங்கமா எழுதுனது தான் காரணம்…
சந்திரனுக்கு போய் சல்பர் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டு இருக்குற இந்த காலத்துல இப்படி எழுதி வச்சிருக்காங்களேன்னு இருந்துச்சு.
அதுக்கு சோசியல் மீடியாவுலயும், எல்லா பக்கத்துல இருந்தும் கண்டனம் வந்துச்சி… போதாக்குறைக்கு அந்த பத்திரிகையே தனக்கு தானே திட்டி கண்டனம் தெரிவிச்சிடுச்சி…
இதுக்கு இடையிலே அந்த பத்திரிக்கைய ’மய்யம்’ஆ வச்சி பள்ளிக்கல்வித் துறை அமைச்சரே சொன்னார் பாருங்க ஒரு கமெண்ட்… முடியல…
நீங்க அப்டேட் குமாரு பாருங்க…
ℳsd ❝இதயவன்❞
நீட் விவகாரத்தில் தங்களை காப்பாற்ற தமிழக ஆளுநரை குறை கூறுகின்றனர்: ஜார்க்கண்ட் ஆளுநர்
அடுத்து என்ன ஆளுநர்கள் நலவாரியமா ?!
குருநாதா
இருக்குறத வச்சுகிட்டு சந்தோஷமா வாழனும்ங்கிற எண்ணம்
மாசக் கடைசில நிறைவேறி விடுகிறது…!!
ச ப் பா ணி
நீ பார்க்காத பார்வைக்கொரு நன்றி…
-ட்ராபிக் போலீஸ்
சாணக்கியன்
அண்ணே…பள்ளிக்கூட கக்கூஸை மட்டும் தான் பார்ப்பீங்களா…பஸ்டாண்டு கக்கூஸை பார்க்க மாட்டிங்களா..
😂😂😂😂 pic.twitter.com/oRU88qXchn
— நாகராஜா சோழன் MA MLA (@prabhu65290) August 31, 2023
balebalu
ஒரே பத்திரிகைக்கு எதுக்கு இரண்டு எடிட்டர் ?
எதிர்ப்பு வந்து அடி வாங்குற நிலைமை வந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் கை காமிச்சு ஓடி ஒளிஞ்சுக்குவோம்..
ℳsd ❝இதயவன்❞
இந்த அடி அடிக்கிறாங்களே நாளைக்கு தினமலர் ல வருமா ?
அடிக்கிறதே தினமலரை தான்டா..
கோழியின் கிறுக்கல்!!
கவுண்டமணி காதுல வாழைப்பூவை மாட்டிகிட்டு வர மாதிரி, எல்லா பசங்களும் காதுல மாட்டிகிட்டு சுத்துறாங்க,
கேட்டா ‘Ear buds’ஆம்!?
Rocky Rk
ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.
இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் ‘குட் ஈவ்னிங் சார்..
‘அவர் ‘குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?’.
போலிஸ், ‘நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்…… “நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.” அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 ரூபாய்க்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்’.
அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், ‘இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்’ என்று சொன்னார்.
போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி ‘சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்’ என்றார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், ‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்…..
ஜோ
நடுநிலை பத்திரிக்கைனு நெனச்சுட்டேன் – பள்ளி கல்வி துறை அமைச்சர்
தினமலர் ~ யப்பா மகனே அங்குசாமி, நீ நல்லா இருக்கணும்யா…
லாக் ஆஃப்
அதானி குழும முறைகேடு: மோடி தயங்குவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!
பச்சோந்தியாக லஞ்ச ஒழிப்புத்துறை மாறிவிட்டது: உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்!