கைதி ஆயிட்டியே ஜெயிலரு…: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

ஏம்ப்பா….கர்நாடக சிவராஜ் உன் கால்ல விழுறாரு… கேரளத்து மோகன் கால் தலைவாங்குறாரு… பிகார்லேர்ந்து ஜாக்கியும் தலைவாங்குறாரு. இதைப் பாத்து நாங்கள்லாம் உன்னை கொண்டாடிக்கிட்டிருக்கோம். ஆனா பாபா குகைக்கு போறேன்னு சொல்லிட்டுப் போயி யோகி கால்ல விழுந்திட்டியே…. படத்துலதாம்ப்பா ஜெயிலரு ஆனா உண்மையிலயே நீ கைதிதாம்ப்பா…

என்ன பண்றது… நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ஜோ…

இந்த அண்ணாமலைக்கு இப்படி அசிங்கப்படுறதே வேலையா போச்சு..
ஆஹ், சினிமா அண்ணாமலை நீங்களா??

மயக்குநன்

எடப்பாடி: கால்ல விழுறதுல என்னையே மிஞ்சிட்டீங்க அண்ணாத்த..!

லிட்டில் கிருஷ்ணா

Me to God….
எனக்கு ஏதும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை….
என்னை வச்சி செய்யாமல் இருக்கலாம் அல்லவா


mathi vanan

மதுரை மாநாடு செல்லும் அதிமுகவினர்
அவசர மருத்துவ உதவி தேவை பட்டால் மதுரை எய்ம்ஸை பயன்படுத்தி கொள்ளவும்
56″ அறிவிப்பு….. ????????????


ℳsd ❝இதயவன்❞

பிரதமரை விமா்சிக்கும் தகுதி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை ~ அண்ணாமலை
எந்தளவுக்கு தகுதி வேணும்?
பத்திரிகைகாரங்க முன்னாடி வாயை திறக்காத அளவுக்கு?!


Karthik M

என்னை வாழ வைத்தது தமிழ்ப்பாலுன்னு சொல்லிட்டு..
உன் ரசிகர்களுக்கு நீயே பால் ஊத்திட்டியே அண்ணாமலை..

#Rajinikanth #YogiAdityanath


ஜோ..

சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா??!!
~ யோகி கால்ல விழுந்துவர்ன்னு வரலாறு சொல்லும்.. கண்ணா…!!


சரவணன். ????

நமக்கு கிடைக்காது என்று தெரிந்த பிறகு தான் அதன்மேல் பற்று அதிகரிக்கிறது..!!
~ எக்ஸ் லவ்வரை சொல்றீங்களா?
எக்ஸ் லவ்வரா, பிரியாணிங்க.

May be an image of 1 person and text that says "Newly Designed Weighing Scale pല அப்பாடா... இன்னும் மாடு'கிட்ட தான் இருக்கோம், நீர்யானை கிட்ட போகல...!"
ℳsd ❝இதயவன்❞

நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் ~ அமைச்சர் உதயநிதி
மறந்த ரகசியம் சூத்திரம் ஞாபகத்துக்கு வந்துருச்சோ ?!


எனக்கொரு டவுட்டு!?

படம் பார்த்துட்டு தலைவான்னு கத்தி கத்தி தொண்டை கூட இன்னும் சரியாகல அதுக்குள்ள இப்டி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கியே..


ஷேக்பரித்

படம் அச்சாஹே
அடுத்து என்ன படம் ?!
லால் சலாம்னு பாய் கெட்டப்ல நடிக்கிறேன்..ல

வசந்த்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ரஜினியுடன் ஜெய்லர் படம் பார்க்க வரவில்லை..
அனுமானுக்கு ஒரு சீட் ஒதுக்கிருக்குனு சொன்னா ஓடி வந்துருப்பார் ஐடியா இல்லாத பசங்க

 

???????????????????????? ????????????????

ரஜினி கன்டென்ட் குடுத்துட்டாப்போதும் விஜய் fans ச கையில புடிக்க முடியாது ????????
#Leo

Vanavil Vijay

ரஜினி: ஹுக்கும்.
தமிழ்நாடு: ம்க்கும்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ப்ளூ சட்டைகாரன் பி லைக்:
அவனவன் எடுக்கற முடிவு நமக்கு சாதகமாதான்யா இருக்கு..!

balebalu

ஜெயிலர் படத்தில் பாதியில் எழுந்து போன உ பி துணை முதல்வர் – செய்தி
செகண்ட் ஆஃப் இழுவை ,சரியான போர் ன்னு ரிவ்யூ எழுதி இருந்ததை
அவரும் படிச்சிட்டாரு போல

லாக் ஆப்

உண்ணாவிரதம்: ஸ்டாலின் தொடங்கி வைக்காதது ஏன்?

மீம்ஸ் புகழ் சீம்ஸ் நாய் மறைந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel