வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ பேசியதை அப்படியே மாற்றி கல்யாண வீட்டில் நண்பர்கள் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த நிலையில், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
வாரிசு படம் ஒரு குடும்ப படம் என்பது ரீதியான தகவல்கள் பரவி வந்தநிலை, அதனை தெளிவுப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, படத்தை பற்றி பேசும் போது,
‘ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு’ ‘சாங் வேணுமா சாங்ஸ் இருக்கு’ ‘எல்லாமே இருக்கு’ என்று பேசினார்.
அவரது பேச்சு சமூகவலைதளங்களில் பயங்கரமாக ட்ரோல் ஆனது. இந்த நிலையில் அதனை தன்னுடைய நண்பன் வீட்டு கல்யாணத்தில் கொஞ்சம் மாற்றி நண்பர்கள் வைத்துள்ள பேனர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காரைக்குடியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரில்,
“ இனிமே பொண்டாட்டிகிட்ட அடிவேணுமா “ அடி இருக்கு
“தலையில் கொட்டு வேணுமா கொட்டு இருக்கு”
“வயித்துல குத்து வேணுமா குத்து இருக்கு”
மிதி வேணுமா “அதுவும் இருக்கு” மொத்தத்துல உனக்கு ஆப்பு இருக்கு
ஊ..ஹாப்பி மேரேஜ் லைப் நண்பா.. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமானுஜம்
பாஜகவுக்கு பணியாற்ற பணிக்குழு? குழப்பும் ஓபிஎஸ்
இந்தியா தோல்வி: கேள்விக்குள்ளாகும் பாண்டியாவின் கேப்டன்சி!