வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை குரூப் வீடியோ காலில் பங்குபெறும் வசதியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறி உள்ளார்.
குடும்பங்கள், நண்பர்கள், தொழில்கள் என அனைவருக்கும், அனைத்திற்கும் பயன்படும் எளிதான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த ஆப் மூலம் கருத்துகளை பரிமாறவும், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யவும் முடியும்
ஒருநாளைக்கு 10,000 மெசேஜ்!
2021ம் ஆண்டு கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியாக உள்ளது. மேலும் ஒருநாளுக்கு 10,000 கோடி கருத்துகள் பரிமாறப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தனது பயனர்களின் வசதிக்காக அவ்வபோது அப்டேட்களை அளித்து வருகிறது வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா.
அதன்படி தற்போது முக்கியமான அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குரூப் வீடியோ கால் வசதியில் வாட்ஸ் அப்பின் போட்டி நிறுவனங்களான ஜூம் அப்பில் 300 முதல் 500 பேர் வரையும், கூகுள் அப்பில் 100 பேர் வரையும் பங்கேற்க முடியும். ஆனால் வாட்ஸ் அப்பில் இதுவரை ஒரே நேரத்தில் 8 பேர் மட்டுமே வீடியோ காலில் பங்கேற்க முடியும்.
ஒரே நேரத்தில் 32 பேர்!
இதனால் வீடியோ காலில் பேச பலரும் வாட்ஸ் அப்பை தவிர்க்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனை தனது நிறுவனத்தின் பின்னடைவாக கருதிய ஜூக்கர்பெர்க் தற்போது 32 பேர் பங்கு பெறும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ஒரு பதிவில் ஜுக்கர்பெர்க் புதிய தகவலை வழங்கி உள்ளார்.
அதில், ”வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரையிலான குரூப் வீடியோ கால் செய்யும் வசதியையும் நிறுவனம் சோதிக்கத் தொடங்கியுள்ளோம்.
இந்த வாரம் முதல் வாட்ஸ்அப்பில் ‘கால் லிங்க்’ அம்சத்தை வெளியிடுகிறோம். இதன் மூலம் நீங்கள் ஒரே கிளிக்கில் அழைப்பில் சேரலாம்.

மேலும் 32 பேர் வரை பாதுகாப்பான ‘என்கிரிப்டெட்’ வீடியோ அழைப்பையும் நாங்கள் சோதித்து வருகிறோம்.
யூசர் கால விருப்பத்திற்குச் சென்று ‘கால் லிங்க்’ உருவாக்கி, அதைத் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
அழைப்பு இணைப்பைப் பயன்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் ‘அப்டேட்’ செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சோனியா அப்செட் : காங்கிரஸ் தலைவர் ரேஸில் இருந்து விலகுகிறாரா கெலாட் ?