மனநலத்தை காப்பது என்றால் என்ன, போர்க்களத்தில் உள்ளது போலவே நமது உடலை போட்டு வாட்டி எடுக்குது ஸ்ட்ரெஸ், அதை சரியாக கையாள்வதுதான் மனநலத்தை காப்பது. அதுதான் நம் உடல் நலத்தையும் காக்கும்.
இந்த போர்க்களத்தின் மாற்றங்களையெல்லாம் சிம்பதெடிக் (Sympathetic )நெர்வோஸ் சிஸ்டம் எனப்படும் நரம்பு மண்டலம் செய்கிறது. இதில் இருந்து நம்மை காக்க பராசிம்பதெடிக் (Parasympathetic) நெர்வோஸ் சிஸ்டம் எனப்படும் நரம்பு மண்டலத்தை நாம் தூண்டி விட வேண்டும். இந்த நரம்பு மண்டலம் அமைதியான காலங்களில் நம் உடலை பாதுகாக்க பிரயோகப்படும்.
அதற்காக நாம் என்ன செய்ய வேண்டியவை இதைத்தான்…
நன்றாக தூங்கி எழுவது. நிம்மதியான உறக்கம் மிக முக்கியம்.
வேலையின் பளுவை வாழ்க்கைக்குள் நுழைய விடாமல் நிர்வகிப்பது. மனம்விட்டுப் பேசுவது. பேச முடியாத விஷயங்களை எழுதுவது (டைரி எழுதுவது).
பிடித்த விஷயங்களில் நேரம் செலவழிப்பது.
உடற்பயிற்சியை இயன்ற அளவுக்கு செய்வது. மூச்சுப் பயிற்சி செய்வது.
உடலுக்கு தேவையில்லாத உணவை துரித உணவுகளையும், நேரம் தவறி சாப்பிடுவதையும் தவிர்ப்பது.
டிவி, இன்டர்நெட், செல்போன் ஆகியவற்றில் தேவையில்லாமல் நேரம் செலவழிப்பதை தவிர்ப்பது.
ஏற்கெனவே உடலிலோ மனதிலோ ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதற்கான சிகிச்சையை சரியாக எடுப்பது.
இவையெல்லாம் நமது மனநலனையும், உடல்நலனையும் காக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு
ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?
மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட்!
மகன் தாலி கட்டியதை பார்த்து, நெப்போலியன் கண்களில் திரண்ட கண்ணீர்!
டாப் 10 நியூஸ்: பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் முதல் 13 மாவட்டங்களில் கனமழை வரை!