மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக உள்ள மாம்பழத்தை, நமது அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம்.
மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தயிர், தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் குறையும்.
மாம்பழக் கூழ், தேன், அரிசி மாவு, பால் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மிருதுவாகும்.
மாம்பழக் கூழ், கோதுமை மாவு, தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
மாம்பழக் கூழ், அவகேடோ கூழ், தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர தோல் சுருக்கத்தைத் தடுக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷாக் அடிக்குது… ஷாக் அடிக்குது: அப்டேட் குமாரு
திருவாரூர்: பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… மா.செ மீது வழக்கு!
டிஜிட்டல் திண்ணை: பங்குச்சந்தை கடும் சரிவு… மோடி ஷாக்! ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி?
தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்குத் தடை!