மனைவியை மணந்து கொண்ட காதலனை பழிவாங்க அவருடைய மனைவியை திருமணம் செய்து கொண்டுள்ளார் பீகாரை சேர்ந்த நீர்ஜ்.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த நீரஜ் – ரூபி தேவி என்ற தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிய நிலையில் தான் நீரஜ் தனது மனைவிக்கு முகேஷ் என்பவருடன் திருமணத்தைக் கடந்த உறவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து முகேஷ் மற்றும் ரூபி தேவி இருவரும் கடந்த பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக நீரஜ், முகேஷ் தன்னுடைய மனைவியை கடத்தி விட்டதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
முன்னதாக நீரஜ் இந்த பிரச்சனையைக் கிராம பஞ்சாயத்து மூலம் தீர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால் முகேஷ் நீரஜின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் தான் நீரஜ் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் முகேஷ்.
முகேஷிற்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன. தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு சென்றதற்காகப் பழிவாங்க நினைத்த நீரஜ் முகேஷின் மனைவியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் கொண்டுள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நீரஜ் 2வது திருமணம் செய்து கொண்ட முகேஷ் மனைவியின் பெயரும் ரூபி. இந்த திருமண நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைக் கண்ட திருமணமாகாத நெட்டிசனகள் பலர் திருமணமானவர்கள் வீட்டை விட்டுச் சென்று வேறோரு திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் சிங்கிளாக இருக்கிறோம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா?: தமிழ்நாடு போலீஸ் கடும் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் நடந்த கலாட்டா!