25 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தைச் சேர்த்து வைத்த சோஷியல் மீடியா!

டிரெண்டிங்

25வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தற்போது தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

உத்தரப் பிரேதச மாநிலம், அசம்கர் மாவட்டம், கோதாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிலாஜீத் மௌரியா(60). இவர் பேச்சுக் குறைபாடு உடையவர்.

இவர் கடந்த 1996ஜூன் 1, அதாவது சரியாக 25ஆண்டுகளுக்கு முன்பு பூஜையில் கலந்து கொள்ள குடும்பத்தினர் உடன் வெளியில் செல்லும் போது காணாமல் போயுள்ளார். ஜிலாஜீத் மௌரியா காணாமல் போகும் போது அவருக்கு வயது35.

ஜிலாஜீத்தை அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்களாகத் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது குடும்பமும் நம்பிக்கை இழந்து இவரைத் தேடும் முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.

ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜிலாஜீத்தின் குடும்பத்திற்கு மீண்டும் அந்த நம்பிக்கை வந்துள்ளது.

ஜிலாஜீத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் ரேபரேலி மாவட்டம் அமேதி என்ற கிராமத்தில் வசித்து வருவதாக சமூகவலைத்தளம் மூலம் தகவல் கிடைத்தது என அவரது குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மௌரியா என்பவர் கூறியுள்ளார்.

அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடிச்சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜிலாஜீத் இருந்துள்ளார். ஆனால் ஜிலாஜீத்தை அடையாளம் கண்டுபிடிக்க அவர் கையில் போடப்பட்டிருந்த டாட்டூ உதவியாக இருந்துள்ளது.

தற்போது 25ஆண்டுகள் கழித்து 60வயதாகும் ஜிலாஜீத் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.

மேலும் அவரது குடும்ப உறுப்பினரான சந்திரசேகர் மௌரியா, “காணாமல் போன ஜிலாஜீத் என்னுடைய மாமா. அவரை நாங்கள் தேடிச்சென்று பார்த்தபோது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் எங்களைக் கட்டி அணைத்துக் கொண்டார்” என்று கூறினார்.

திருமணம் ஆகாத ஜிலாஜீத் கடந்த செவ்வாய் கிழமை இரவு தனது வீட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிலாஜீத்தை அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர்.

இந்த நெகிழ்சியான சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

மோனிஷா

நிதீஷை முதல்வராக்கியதற்காக வருத்தப்படுகிறேன்: பிரசாந்த் கிஷோர்

வெளிநாட்டில் வசிப்பவர்கள் சுலபமாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலாம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *