சென்னையில் நடைபெற்ற மேற்கு வங்க ஆளுநரின் இல்ல விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரர் இல. கோபாலனின் 80ஆவது பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 3) கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவிற்கு இல. கணேசனின் அழைப்பை ஏற்றுச் சென்னை வந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (நவம்பர் 2) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து இன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெறும் ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவானது மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கேரளா மேளம் என்று சொல்லக்கூடிய செண்டை மேளமும் இடம்பெற்றிருந்தன.

இசைக் கலைஞர்கள் செண்டை மேளம் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மம்தா பானர்ஜி தானும் அவர்கள் அருகில் சென்று செண்டை மேளம் வாசித்தார்.
மேற்கு வங்க முதல்வர் செண்டை மேளம் வாசிப்பதைச் சுற்றியிருந்த அனைவரும் பார்த்து ரசித்தனர். அங்கிருந்த சிலர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
“காந்தாரா” பற்றி நிர்மலா சொன்னது என்ன?
பிரபல ஜவுளிக்கடைகளில் 2 ஆவது நாளாக ஐடி ரெய்டு!