சத்துகள் நிறைந்த தாமரை விதைகளில் வடமாநிலங்களில் நவராத்திரி மற்றும் தீபாவளியன்று கீர் செய்வார்கள். விரத காலங்களிலும் இந்த கீர் செய்து சாப்பிடுவார்கள். வாரத்தின் முதல் வேலை நாளான இன்று புத்துணர்ச்சியுடன் செயல்பட நீங்களும் இந்த கீர் செய்து சுவைக்கலாம். வாரம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வலம் வரலாம்.
என்ன தேவை?
பால் – அரை லிட்டர்
தாமரை விதை – அரை கப்
சர்க்கரை – அரை கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர்திராட்சை) – 10
பிஸ்தா, பாதாம், முந்திரி – தலா 8
குங்குமப்பூ – சிறிதளவு
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
ஜாதிப்பூ, ஜாதிக்காய்த்தூள் – தலா ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
வாணலியில் நெய்யைச் சூடாக்கி அதில் தாமரை விதைகளைப் போட்டு வறுக்கவும். அடுப்பைக் குறைத்து வைத்து மிதமான தீயில் தாமரை விதை மொறுமொறுப்பாகும் வரை, அதாவது 5 நிமிடங்கள் வறுக்கவும். கையில் எடுத்து அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும். அதுவரை வறுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றில் சிறிதளவு அலங்கரிக்க எடுத்துக்கொண்டு மீதியுள்ளவற்றை கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, பொடித்து வைத்துள்ள பொடி, ஏலக்காய்த்தூள், ஜாதிப்பூ, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். பின்னர் வறுத்து வைத்துள்ள தாமரை விதையைக் கைகளால் ஒன்றிரண்டாக உடைத்து (மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கலாம்) பாலில் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ, நெய்யில் வறுத்த திராட்சை மற்றும் உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி அலங்கரித்துச் சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம். கீர் திக்காக வேண்டுமென்றால் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்கிரா பர்ஃபி
‘ப்ளூலாக்: எபிசோடு நாகி’ – விமர்சனம்!
தினுசு தினுசா பிரச்சனை வருதே – அப்டேட் குமாரு