உருவக்கேலி எல்லாவற்றையும் தாண்டி திருமண நாள் கொண்டாடுறோம்- விமர்சித்தவர்களுக்கு ரவீந்தர் பதிலடி

டிரெண்டிங்

சீரியல் நடிகை மகாலட்சுமி  தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு  இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை ரசிகர்களை வியப்பில்  ஆழ்த்திய திருமணம் ஒன்று நடந்தது. அது, சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தரின் திருமணம்தான். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும் அந்த நேரத்தில் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்தது குறித்து பலரும் விமர்சித்தனர்.

பணத்துக்காகவே மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டினர். பலரும் பலவிதமாக பேசினாலும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் மீது மோசடி வழக்கு ஒன்று கொடுக்கப்பட்ட  நிலையில்  ரவீந்தர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது, அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு நேற்று (செப்டம்பர் 1) இரண்டாவது திருமண நாள் ஆகும். இதையொட்டி, மகாலட்சுமி கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

ரவீந்திரனும்  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வெற்றிகரமாக நாங்கள் இரண்டாவது திருமண நாளை கொண்டாடுகிறோம். இன்னுமா நீங்க பிரியலனு கேட்கும் உங்களை மறுபடியும் ஏமாத்திட்டோம். எங்களை கிண்டல், உருவ கேலி,  அசிங்கப்படுத்துவதாலும் பயன் இல்லை. கடந்த வருடம் பல பிரச்சனைகளும் திருப்பங்களும் தான்  எங்களுடைய வாழ்க்கையில் இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

எனக்கு வந்த வலி எல்லாவற்றையும் உன்னுடைய கைகளில் இறுக்கமாக நீ பிடித்துக் கொண்டாய் என்று மகாலட்சுமி குறித்து சிலாகித்து கூறியுள்ளார் ரவீந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தோனி எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தார் – யுவராஜ் சிங் தந்தை குற்றச்சாட்டு!

Paralympics 2024: ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்… ஒரே நாளில் 7 பதக்கங்களுக்கு குறி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *