கிச்சன் கீர்த்தனா : மக்னா மலாய் கறி

Published On:

| By christopher

‘மக்னா’ என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களாலும் பிரபலமாக உண்ணக் கூடிய ஒரு பொருளாக உள்ளது. இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால்  ஓர் ஆரோக்கிய உணவாகவும் கருதப்படுகிறது. இந்த தாமரை விதைகளைப் பயன்படுத்தி சுவையான கறி செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

தாமரை விதை பதப்படுத்தியது – (மக்னா) 200 கிராம்
பச்சைப் பட்டாணி – 50 கிராம்
வெங்காயம், தக்காளி – தலா 2
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கசூரி மேத்தி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, சீரகம், வெண்ணெய், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன்
முந்திரி – 10
பச்சை மிளகாய் – 2
சர்க்கரை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி அரைக்கவும். முந்திரியை விழுதாக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய், எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சர்க்கரை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கிளறவும். உப்பு, முந்திரி விழுது, பச்சைப் பட்டாணி, சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். கால் கப் தண்ணீர் சேர்த்து வெந்ததும், ஃப்ரெஷ் க்ரீம், கசூரி மேத்தி சேர்த்து இறக்கி வைக்கவும். பின் வேறு ஒரு கடாயில் சிறிது எண்ணெயில் மக்னாவை வறுத்து கிரேவியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்

கிச்சன் கீர்த்தனா: குல்சா!

ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? எச்சரிக்கும்  ஐசிஎம்ஆர்!

ஒரு டோக்கன் கொடுத்தது தப்பாப்பா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel