மதுரை ரயில் நிலையத்தில் திருமண தம்பதியினர் ரூ.5000 கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று மதுரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன்பாகவும், பிறகும் போட்டோஷூட் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் இந்திய மக்களிடம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் மதுரை ரயில் நிலையத்தில் திருமண தம்பதிகள் போட்டோஷூட் எடுத்துக்கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதியர் ரூ.5000 கட்டணம் செலுத்தி பல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூ.1500. மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூ.3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ரயில்வே நிலையத்தை பொறுத்தவரையில் X,Y,Z என்ற மூன்று வகையான சிட்டிகள் உள்ளன. அதன்படி புகைப்படங்களை எடுத்துக்கொள்வதற்காக ஒவ்வொரு வகையான சிட்டிகளுக்கும் அனுமதி கட்டணம் மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மதுரை Y சிட்டியாக உள்ளது.
இதனால் மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.5000, கல்வி தொடர்பான போட்டோஷூட்களுக்கு ரூ.2500, தனிநபர் பயன்பாட்டிற்கான போட்டோஷூட்டிற்கு ரூ.3500 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
செல்வம்
தேசிய விளையாட்டு போட்டிகள்: உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
தென்னிந்திய ரசிகர்களுக்கு ஷாகித் கபூரின் கோரிக்கை!